ஈரோடு மாவட்டம் பொம்மன்பட்டியில் FOLDSCOPE பயிற்சி

ஈரோடு மாவட்டம் பொம்மன் பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி 01.03.2014 அன்று தேசிய அறிவியில் தின கொண்டாட்டத்தின் போது வழங்கப்பட்டது. அதில் 30 மாணவர்கள் 10 ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஈரோடு பொம்மன் பட்டி நெசவில் புகழ் பெற்ற ஊர். அங்கே உள்ள நெசவாளர்கள் பாரம் பரியமாக ஜமுக்காளத்தை நெய்யக் கூடியவர்கள். அவர்கள் நம் பெயரையே சமுக்காளத்தில் வடித்துக் கொடுக்க கூடிய திறன் படைத்தவர்கள். பட்டில் கூட மணப் பெண்ணின் பெயரையும், மண…

சிவகாசியில் மடிப்பு நுண்ணோக்கி கண்காட்சி மற்றும் பயிற்சி

அறிவியல் தினம் 28.02.2018 அன்று கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக நான், முனைவர் தினகரன், திரு. அமலராஜன் ஆகியோர் பங்கேற்றோம். நான் மடிப்பு நுண்ணோக்கியை காட்சிப்படுத்தியும், அதன் செயல்படும் முறை மற்றும் அதனை பயன்படுத்தும் முறை ஆகியவற்றை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கற்றுக்கொடுத்தேன். மேலும் கண்காட்சிக்கு வந்த பெற்றோர்களும் மடிப்பு நுண்ணோக்கியை ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர். வந்தவர்கள் அனைவரும் அதன் விலை மற்றும் கிடைக்குமா என்ற கேள்வியையே முன் வைத்தனர். நானும் அனைவருக்கும வெப்சைட் அட்ரஸ் கொடுத்துள்ளேன். பள்ளிகளில்…

ஈடன் கல்வியியல் கருத்துக் கூடத்தில் புதிய மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி

ஈடன் கல்வியியல் கருத்துக் கூடத்தில் புதிய மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி அற்புதமான உணர்வு. எதிர்பார்க்காத பயிற்சி. ஆம் மடிப்பு நுண்ணோக்கியின் இணை கண்டுபிடிப்பாளர் திரு. JIM CYBULSKI   முத்துப்பட்டியில் உள்ள ஈடன் குழந்தைகளுக்கு பயிற்சி வழங்கியது அற்புத உணர்வு. குழந்தைகளுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துகள்ளது. தொடர்ச்சியான செயல்பாட்டில் குழந்தைகள் ஈடுபட்டுள்ளனர்.  

மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி- நாமக்கல் மாவட்டம்

தமிழ்நாடு  நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரப் பாளையத்தில் குழந்தைகளுக்காக இயங்கி வரும் நூலகத்தை சிகரம் என்ற அமைப்பு செயல்படுத்தி வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவர்கள் நூல்களை எடுத்துப் பயன்படுத்தி வருகின்றனர்.  சிகரம் அமைப்புடன் இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 21.01.2018 அன்று ஒரு பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் அப்பகுதியில் படிக்கும் 3ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை உள்ள சுமார் 30 மாணவர்கள் அப் பயிற்சியில் கலந்து கொண்டனர். திருவணாமலை மருத்துவக்கல்லூரியில் பணியாற்றி…

வெண்டைகாய் பூ மகரந்தம்

நான் கோவிலுக்காக எங்க கிராமத்திற்கு போனேன். எங்கள் கிராமம் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தை அடுத்து உள்ளது. நாங்கள் சென்ற வழியில் வெண்டைகாய் காய்த்திருந்தது. அதில் ஒரு பூவை பறித்து மடிப்ப நுண்ணோக்கியில் பார்க்கலாம் என்று எடுத்துவந்து வீட்டில் பதிவு செய்தேன். இது என்னுடைய பதிவு. நான் மடிப்பு நுண்ணோக்கியில் பார்த்த தெளிவான பதிவு நகல் படத்தில் இல்லை. 

அருந்ததியர் குழந்தைகளுடன் ஒரு நாள்

சமீபத்தில் விருநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள இரண்டு கிராமங்களுக்கிடையே நடைபெற்ற சாதி சண்டையில் பெரிதும் பாதிக்கப்பட்ட அருந்ததியர் மக்களுக்கான மூன்று நாள் ஆற்று படுத்துதலுக்கான பயிற்சி நடைபெற்றது. அதில் குழந்தைகளுக்கு ஒருநாள் விளையாட்டும் மற்றும் மடிப்பு நுண்ணோக்கி பயிற்சியை வழங்கினேன். அற்புதமான குழந்தைகள். குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்றனர். அவர்களுக்கு சிலேடு தயாரித்தல் மற்றும் மடிப்பு நுண்ணோக்கி கையாலுதல்  ஆகியவற்றுக்கு பயிற்சி கொடுத்தேன். குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்றனர். அவர்கள் தங்களுக்கும் ஒரு மடிப்பு நுண்ணோக்கி இருந்தால் கொடுங்கள்…

நார்த்தங்காய் மகரந்தம்

முகுந்தன் பதிவு இது. காலையில் கணித வகுப்பு நடந்து கொண்டிருந்தபோதே சொல்லிவிட்டான். சார் இன்றைக்கு வகுப்பு முடிந்ததும் நார்த்தங்காய் மரத்தில் உள்ள பூவின் மகரந்தத்தை பதிவு செய்யலாம் என்று. நானும் வகுப்பை முடித்துவிட்டு தயாரானோம். அற்புதமான மரந்தம். காலை சூரிய ஒளியில் அற்புதமாக இருந்தது. அதனை பதிவு செய்தோம். அவைதான் இவை.

மடிப்பு நுண்ணோக்கி கண்காட்சி- NCSC2017 Channai

25வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு சென்னை சத்தியபாமா பல்கலைகழகத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழ்நாட்டில் இளம் அறிவியல் விஞ்ஞானிகளை உருவாக்கும் செயலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இளம் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 300 ஆய்வுகட்டுரைகளை 1500 மாணவர்களின் பங்களிப்புடன் சமர்ப்பிக்கப்படும். அப்படி சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகள் தேசிய மாநாட்டில் கலந்துகொள்ளும். 3நாள் நடைபெற்ற இம் மாநாட்டில் 1500 மாணவர்கள் 300 ஆசிரியர்கள் 200…

மடிப்பு நுண்ணோக்கியை சுத்தம் செய்யலாம்

ஒர் ஆண்டுகளுக்கு மேலாக மடிப்பு நுண்ணோக்கியை தொடர்ச்சியாக பயன் படுத்தியதால் அது மிகவும் அழுக்காகிவிட்டது. அதனை இன்று சுத்தம் செய்யலாம் என்று நினைத்து அதனை தண்ணீரில் இட்டு சோப்பு போட்டு சுத்தம் செய்தேன். அற்புதமாக சுத்தமாகிவிட்டது.  நீங்களும் உங்கள் மடிப்பு நுண்ணோக்கியை சுத்தம் செய்துகொள்ளலாம்.

திரையிடல்

ஞாயிறு விடுமுறை. இனியன் வீட்டில் ஏதோ செய்து கொண்டிருந்தான். நான் அவனை பார்த்த போது போர்வையை மேலே போர்த்திக்கொண்டு மடிப்பு நுண்ணோக்கியை உள்ளே வைத்து ஏதோ செய்து கொண்டிருந்தான். அவன் என்ன செய்கிறான் என்று கேட்டேன். நான் உள்ளே இருட்டுக்குள் மடிப்பு நுண்ணோக்கியில் உள்ள உருவத்தை பெரிது படுத்தி பார்க்கிறேன். சூப்பரா தெரியுது என்றான். நானும் அவனோடு இணைந்து பார்த்தேன் நன்றாகவே தெரிந்தது. அப்படி தெரிந்ததை ஒரு பேப்பரை கொண்டு கீழே வைத்து வடிவத்தை வரையாலாம் தானே…

தோட்டத்தில் ஒரு மாத்

தோட்த்தில் நான் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தேன். சுற்றுசுவரில் ஒரு மாத் உட்கார்ந்திருந்தது. அதனை தொந்தரவு செய்யாமல் ஒரு செலோ டேப்பில் அதன் செதில்களை ஒட்டி எடுத்துக் கொண்டேன். அதனை மடிப்பு நுண்ணோக்கியின் கீழ் வைத்து பதிவு செய்தேன். இதன் செதில்கள் பல்வேறு வடிவத்தில் இருப்பதை பார்க்க முடிந்தது. குறிப்பாக நீண்டும், குட்டையாகவும், ஒல்லியாகவும். குண்டாகவும் இருந்தது. இதற்கு முன் ஒரே மாதிரியான வடிவம் கொண்டதாகவே பார்த்திருக்கிறோம். ஒரே மாத்தில் பல வடிவங்களில் செதில்கள் அமைந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பார்ப்பதற்கும்…

மாத் செதில்கள்

பள்ளியில் உணவு இடைவேளை, நான் அலுவலகத்தில் இருந்தேன். என் மாணவி ஒருத்தி சார் ஒரு வண்ணத்துப்பூச்சி கேட்ல உட்கார்ந்திருக்கிறது என்றாள். நானும் அதை பார்க்கச் சென்றேன். குழந்தைகள் சொன்னால் உடனே பார்ப்பது என் வழக்கம். அதன் அடிப்படையில் பார்த்தேன். அது வண்ணத்துப்பூச்சி அல்ல. அது ஒரு மாத்.அதன் இறக்கையை விரித்தே இருந்தது. அதன் செதில்களை மடிப்பு நுண்ணோக்கியில் பார்க்கலாம் என்று முடிவு செய்து அதனை தொந்தரவு செய்யலாமல் அதன் செதில்களை டேபில் ஒட்டி எடுத்து பதிவு செய்தோம்….

வண்ணத்துப்பூச்சியின் செதில்கள்

  இன்று பழனி அருகே உள்ள பழைய ஆயக்குடியின் உள்பகுதியில் உள்ள  கிராமமான கணக்கன் பட்டியில் வினாயக் வித்யாலையா பள்ளிக்கு சென்றிருந்தேன். அங்கே காணப்பட்ட ஒரு வண்ணத்துப்பூச்சியின் செதில்களை நான் பதிவு செய்தேன். அற்புதமாக இருந்தது.

அறிவியல் கண்காட்சி PSY College of Engineering – சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள PSY College of Engendering ல் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் தென்மாவட்டங்களிலிருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட பள்ளிகள் தங்களுடைய அறிவியல் மாதிரிகளை கண்காட்சிக்கு வைத்திருந்தனர். இனியன் தன்னுடைய நண்பர்களுடைன் இணைந்து மடிப்பு நுண்ணோக்கியில் தாங்கள் கண்டுபிடித்தவற்றையும் அவைகளை எவ்வாறு மடிப்பு நுண்ணோக்கியில் கண்டறிந்தோம் என்பதையும், அதன் பயன்பாட்டையும் காட்சி படுத்தி விளக்கம் அளித்துள்ளனர். 11,12.10.2017 ஆகிய இரண்டுநாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவர்களும் , ஆசிரியர்களும் கண்டுகளித்துள்ளனர். இனியனின் குழுவில் விஷால்,…

காளாக்காடு- திண்டுகல் மாவட்டம்

காலாண்டு விடுமுறையில்  திண்டுகள் மாவட்டம் செம்பட்டியை அடுத்த காளாக்காடு என்னும் மலை கிராமத்தில் இரண்டுநாள் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி நடைபெற்றது.      இதற்கான ஏற்பாட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திண்டுகல் மாவட்டம் ஏற்பாடு செய்திருந்தது.  இதில் மலைகிராம குழந்தைகள் மற்றும் திருப்பூர், தர்மபுரி, சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களிலிருந்து 30 குழந்தைகள் வந்திருந்தனர். 10 தொண்டர்கள் வந்திருந்தனர். இந்த இரண்டுநாள் பயிற்சியில் மாதிரிகளை சேகரிப்பது எப்படி, அவற்றை எப்படி சிலேடாக்குவது. மடிப்பு நுண்ணோக்கியின் செயல்பாடு மற்றும்…

EDEN SCIENCE CLUB – FOLDSCOPE – TRAINING- MUTHUPATTI, MADURAI.

காலண்டு தேர்வு முடிந்துவிட்டது. விடுமுறையில் மடிப்பு நுண்ணோக்கி கொண்டு ஒரு செயல்பாடு செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் நேற்று மடிப்பு நுண்ணோக்கி பயிற்சி கிளப் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. ஏற்கனவே இதில் பரிட்சயம் என்பதால் வெகு விரைவாக கற்றுக்கொண்டனர். 

ஈடன் சைன்ஸ் கிளப் காலாண்டு செயல்பாடு

காலாண்டு தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இனியன் அவனுடைய நண்பர்களோட இணைந்து கொண்டு மடிப்பு நுண்ணோக்கியை பயன்படுத்தி வருகிறான். ஊருக்குள் எடுத்துச் சென்று குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்து வருகிறான். இதில் ஒரு வகை பிராஜெக்ட் செய்யலாம் என்று சொல்லியிருக்கிறான். எங்கள் ஈடன் சைன்ஸ் கிளப் உறுப்பினர்கள் இணைந்து இந்த பிராஜெக்டை முடிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் கருத்துக் கேட்ப இந்த காலண்டு விடுமுறையை பிராஜெக்ட் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.  

கடுகு இலை

இது இன்று இனியன் செய்த பதிவு. வீட்டுத்தோடத்தில் கடுகு விதைக்கப்பட்டுள்ளது. அதன் இலை புதினா போல் இருந்தது. அதை எடுத்து மடிப்பு நுண்ணோக்கியில் வைத்து பார்க்கலாம் என்று சொன்னான். நான் ஒரு இலையை கொடுத்தேன். அதனை பதிவு செய்தான். கடுகு இலைக்கும், புதினா இலைக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக கூறினான். புதினா இலை எங்கேடா பதிவு செய்தாய் என்று கேட்டேன். அதெல்லாம் போன வருடமே பதிவு செய்து பார்த்துவிட்டேன் என்றான். அற்புதமான பதிவு இது. இதற்கு முன்…

கொசுவின் கூட்டுகண்கள் – இனியனின் பதிவு

நேற்று இரவு இனியன் தன்னுடைய மடிப்பு நுண்ணோக்கியில் கொசுவின் கூட்டுக் கண்களையும் இறகுகளையும் பதிவு செய்தான். அதன் உடல் சிதைந்து போனதால் மற்றவற்றை முழுயையாக அவனால் பதிவு செய்ய முடியவில்லை என்றான். மீண்டும் இதே போன்று மற்ற பாகங்களையும் பதிவு செய்வேன் என்று சொல்லியிருக்கிறான். தொடர்கிறது அவன் முயற்சி.  

மும்பையில் மடிப்பு நுண்ணோக்கிப்பயிற்சி – 1

மும்பை மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி-1 2017 ஆகஸ்ட் 28,29 ஆகிய தேதிகளில் ஸ்டான்போர்ட் பல்கலைகழக பேரா. மனுபிரகாஷ் முன்னிலையில் இந்திய அரசின் DBTன் பெரும் முயற்சியில் இந்திய அளவில் புதிய அற்புத கண்டுபிடிப்பான மடிப்பு நுண்ணோக்கியின் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பில் பயிற்சி மும்பையில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் விஞ்ஞா னிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் நான் கலந்து கொண்டது பெருமையளிக்கிறது. மேலும் நான் இந்த பயிற்சியில் நான் கலந்து கொள்வதற்கு மிப்பெரிய விஞ்ஞானிகள் பலரும் மெனக்கிட்டது உண்மையிலேயே…

வண்ணத்துப்பூச்சியின் இறகு

31.07.17 மாலை இனியன் தன் பாக்ஸ்ல் கொண்டுவந்த வண்ணத்துப் பூச்சியை மடிப்பு நுண்ணோக்கியில் வைத்து பதிவு செய்தான். இப்போது ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்து எடுத்துவந்தான். அவன் பள்ளி விட்டு வெளியே வரும் போது ரோட்டில் அடிப்பட்டு கிடந்ததாம். அதைத்தான் எடுத்துவந்திருந்தான். இப்போது எதை பார்த்தாலும் மடிப்பு நுண்ணோக்கியில் பார்க்கலாம் என்ற நினைவோடே இருக்கிறான். மகிழ்ச்சி அளிக்கிறது. அவன் பதிவு செய்த சில படங்கள் இத்துடன் இணைத்துள்ளேன். வித விதமான வண்ணத்துப்பூச்சிகளின் இறகுகளை பார்க்க முயற்சித்து வருகிறான்….

வெங்காயத் தோல்

இது முதின்ஸ் பதிவு. முதின்ஸ் தற்போது 9ம் வகுப்பு படித்து வருகிறாள். அவள் அறிவியல் பாடத்தில் வெங்காயத்தோல் எடுத்து எப்படி சிலேடு தயார் செய்வது. அதனை மைக்ராஸ்கோப்பில் வைத்து பார்ப்பது எப்படி, பார்த்தால் என்ன தெரியும் என்று இருந்ததை செய்து பார்க்கும் பிராஜெக்ட் கொடுக்கப்பட்டடிருந்தது. அதை ஒட்டி இதனை பதிவு செய்தாள்.

இனியனின் பதிவு

இனியன் கொண்டுவந்த  இரண்டாவது வண்ணத்துப்பூச்சியின் நிறம் மஞ்சள் நிறத்தில் இருந்தது. ஆனால் நுண்ணோக்கியில் வைத்து பார்த்தபோது அது பல வண்ணங்களில் மின்னியதை பார்க்க முடிந்தது. மேலும் வண்ணம் இல்லாத இடத்தில் இறகு ஒரு தண்ணீர் துளிகளை தொடர்ச்சியாக வரிசையாக வைத்தது போன்ற அமைப்பில் இருக்கிறது. இதனால் தான் அந்த வண்ண மாற்றம் தோன்றுகிதோ என்ற சந்தேகத்தை இனியன் கேட்டான். விளகம் தெரியும் என்றால் இங்கே பதிவிடுங்கள் அநேகர்தெரிந்து கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.

இனியனின் பதிவு – வண்ணத்துப்பூச்சி

இன்று இனியன் வரும்போது அவன் டப்பாவில் இரண்டு வண்ணத்துப்பூச்சிகளை கொண்டுவந்தான். அது இறந்து பல நாட்கள் இருக்கும். அதன் வண்ணங்கள் போய்விட்டன. சில இடங்களில் மட்டும் அங்கங்கே வண்ணங்கள் இருந்தன. அந்த இரண்டு வண்ணத்துப்பூசிகளின் இறகுகளின் வண்ணங்களையும். அமைப்பையும் மடிப்பு நுண்ணோக்கியில் பதிவு செய்தான். இது ஒரு வண்ணத்துப்பூச்சியின் இறகு.

வண்ணத்துப்பூச்சியின் இறகு

படத்தில் காணப்படும் வண்ணத்துப்பூச்சியின் மூன்று வண்ண பகுதியிலும் இருந்து எடுக்கப்பட்ட பவுடர் போன்ற பகுதியின் வடிவங்கள்தான் இவை. இவை கோதுமை அரிசி போன்று காணப்படுகின்றன. மேலும் வண்ணங்கள் நேரில் பார்ப்பதற்கும் நுண்ணோக்கியில் பார்ப்பதற்கும் வேறுபடுகின்றன.