அறிவியல் கண்காட்சி PSY College of Engineering – சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள PSY College of Engendering ல் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் தென்மாவட்டங்களிலிருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட பள்ளிகள் தங்களுடைய அறிவியல் மாதிரிகளை கண்காட்சிக்கு வைத்திருந்தனர். இனியன் தன்னுடைய நண்பர்களுடைன் இணைந்து மடிப்பு நுண்ணோக்கியில் தாங்கள் கண்டுபிடித்தவற்றையும் அவைகளை எவ்வாறு மடிப்பு நுண்ணோக்கியில் கண்டறிந்தோம் என்பதையும், அதன் பயன்பாட்டையும் காட்சி படுத்தி விளக்கம் அளித்துள்ளனர். 11,12.10.2017 ஆகிய இரண்டுநாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவர்களும் , ஆசிரியர்களும் கண்டுகளித்துள்ளனர். இனியனின் குழுவில் விஷால், பிரவீன், பரத்பாபு ஆகியோர் பங்கேற்றனர். பள்ளி அளவில் அவர்களுக்கு பெரும் பாராட்டு கிடைத்ததாக பதிவு செய்தனர்.

Leave a Reply