திரையிடல்

ஞாயிறு விடுமுறை. இனியன் வீட்டில் ஏதோ செய்து கொண்டிருந்தான். நான் அவனை பார்த்த போது போர்வையை மேலே போர்த்திக்கொண்டு மடிப்பு நுண்ணோக்கியை உள்ளே வைத்து ஏதோ செய்து கொண்டிருந்தான். அவன் என்ன செய்கிறான் என்று கேட்டேன். நான் உள்ளே இருட்டுக்குள் மடிப்பு நுண்ணோக்கியில் உள்ள உருவத்தை பெரிது படுத்தி பார்க்கிறேன். சூப்பரா தெரியுது என்றான். நானும் அவனோடு இணைந்து பார்த்தேன் நன்றாகவே தெரிந்தது. அப்படி தெரிந்ததை ஒரு பேப்பரை கொண்டு கீழே வைத்து வடிவத்தை வரையாலாம் தானே என்றான். ஆமா நிச்சயமாக வரையலாம் என்றான். சிறிது நேரத்திற்கு பிறகு ஒரு டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு வீட்டின் இருண்ட பகுதிக்குச் சென்றான். அங்கே அந்த டார்ச் லைட் வெளிச்சத்தில் சுவற்றில் திரையிட்டுப்பார்த்தான். முதலில் ஒன்றும் தெரியவில்லை. பின்னர் கொஞ்சம் முன்னும் பின்னமாக நகன்று பார்த்து கண்டுபிடித்துவிட்டான். அவன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து கொண்டு அவன் மடிப்பு நுண்ணோக்கியின்ள  உள்ளே உள்ள பொருளை பெரிதுபடுத்தினான். சுவற்றி அற்புதமாக இருந்தது. நானும் பார்த்து ரசித்தேன். 

Leave a Reply