அருந்ததியர் குழந்தைகளுடன் ஒரு நாள்

சமீபத்தில் விருநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள இரண்டு கிராமங்களுக்கிடையே நடைபெற்ற சாதி சண்டையில் பெரிதும் பாதிக்கப்பட்ட அருந்ததியர் மக்களுக்கான மூன்று நாள் ஆற்று படுத்துதலுக்கான பயிற்சி நடைபெற்றது. அதில் குழந்தைகளுக்கு ஒருநாள் விளையாட்டும் மற்றும் மடிப்பு நுண்ணோக்கி பயிற்சியை வழங்கினேன். அற்புதமான குழந்தைகள். குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்றனர். அவர்களுக்கு சிலேடு தயாரித்தல் மற்றும் மடிப்பு நுண்ணோக்கி கையாலுதல்  ஆகியவற்றுக்கு பயிற்சி கொடுத்தேன். குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்றனர். அவர்கள் தங்களுக்கும் ஒரு மடிப்பு நுண்ணோக்கி இருந்தால் கொடுங்கள் என்றனர். நானும் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் தருகிறேன் என்று உறுதி அளித்திருக்கிறேன். குழந்தைகள் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. 40க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து போய்விட்டதாகவும். அவற்றில் குழந்தைகளின் பள்ளி பாடபுத்தகங்கள் நோட்டுகள் உட்பட எரிந்து போய்விட்டதாகவும் பதிவு செய்தனர். அவர்களோடு ஒரு நாள் செலவு செய்தது உண்மையிலேயே எனக்கு கிடைத்த ஒரு நல் வாய்ப்பாகவே கருதுகிறேன்.

One Comment Add yours

Leave a Reply