சிவகாசியில் மடிப்பு நுண்ணோக்கி கண்காட்சி மற்றும் பயிற்சி

அறிவியல் தினம் 28.02.2018 அன்று கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக நான், முனைவர் தினகரன், திரு. அமலராஜன் ஆகியோர் பங்கேற்றோம். நான் மடிப்பு நுண்ணோக்கியை காட்சிப்படுத்தியும், அதன் செயல்படும் முறை மற்றும் அதனை பயன்படுத்தும் முறை ஆகியவற்றை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கற்றுக்கொடுத்தேன். மேலும் கண்காட்சிக்கு வந்த பெற்றோர்களும் மடிப்பு நுண்ணோக்கியை ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர். வந்தவர்கள் அனைவரும் அதன் விலை மற்றும் கிடைக்குமா என்ற கேள்வியையே முன் வைத்தனர். நானும் அனைவருக்கும வெப்சைட் அட்ரஸ் கொடுத்துள்ளேன். பள்ளிகளில் தேவை அதிகம் இருப்பதை பார்க்க முடிந்தது. தனியார் பள்ளிகள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர். அரசு பள்ளி மாணவர்களும் பெற்றோர்கள் மட்டுமே இதன் விலை குறித்தோ மற்றும் வாங்குவது குறித்தோ பேச விலலை. ஆனால் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். மடிப்பு நுண்ணோக்கியை பயன்படுத்தினர்.

Leave a Reply