2020 புத்தாண்டு கொண்டாட்டம் மடிப்பு நுண்ணோக்கியோடு

ஈடன் சைன்ஸ் கிளப்பின் 10 உறுப்பினர்களைக் கொண்ட குழு 2020 ஜனவரி 1ம் தேதி கூத்தியார் குண்டு கண்கமாய்க்கு மடிப்பு நுண்ணோக்கிப் பயணத்தை மேற்கொண்டது. கண்மாயில் நிறைய தண்ணீர் இருந்தது. குழந்தைகள் அதில் குதித்து விளையாடவே ஆர்வம் காட்டினர். நானும் அனுமதித்தேன். விளையாட்டின் ஊடேயே இந்த மடிப்பு நுண்ணோக்கிப் பதிவும் செய்யப்பட்டது. உண்மையில் இது போன்ற எளிய உபகரணத்தால் மட்டுமே சாத்தியம். புத்தாண்டை மடிப்பு நுண்ணோக்கியோடு கொண்டாடினோம்.

அந்துப் பூச்சியின் செதில்கள்.

காலையில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த போது தரையில் அந்துபூச்சி கிடந்தது. அதன் இறகில் உள்ள செதில்களை பார்க்கலாம் என்று மடிப்பு நுண்ணோக்கியில் வைத்துப் பார்த்து பதிவு செய்தோம்.

எறும்பின் முட்டை

இது கோவை இலையில் இருந்த முட்டைகள். அந்த முட்டைகள் மூன்று மூன்றாக அற்புதமான அடுக்கப்பட்ட வகையில் இருந்தது. அதனை ஒரு எறும்பு அதனை பாதுகாத்துக் கொண்டு இருந்ததையும் பார்க்க முடிந்தது. இந்த எறும்பிற்கு இறகுகள் இருந்ததையும் பார்க்க முடிந்தது. மடிப்பு நுண்ணோக்கியின் கீழ் பதிவு செய்த போதும் கூட அந்த எறும்பு சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது.

புறத்தோல் மற்றும் அகத்தோல்

பசலி இலையின் புறத்தோல் மற்றும் அகத்தோலை நீக்கி அதன் வடிவங்களை பார்த்தோம். புறத்தோல்லை பார்க்கும் போது இலைத்துளைகள் தெளிவாகம் அதன் ஒட்டிய பகுதிகளும் தெளிவாகவும் தெரிந்தது. அகத்தோலில் பார்க்கும் போது அதன் வடிவங்களில் மாற்றத்தைப் பார்க்க முடிந்தது. அது உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன். மேலும் பசலி இலை இலைத்துளைகளை மாணவர்களுக்கு தெளிவாக காட்டுவதற்கு உதவும்.

ஓட்டஞ்சத்திரம் அரசு பெண்கள் பள்ளியில் மடிப்பு நுண்ணோக்கிக அறிமுகம்

ஒட்டஞ்சத்திரத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த நவம்பர் 22ம்தேதி ஒரு நாள் அறிவியல் உரையும் மடிப்பு நுண்ணோக்கி அறிமுக நிகழ்ச்சியும் நடந்தது. இதற்கான ஏற்பாட்டை திண்டுகல் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க செயலாளர் ஏற்பாடு செய்திருந்தார். சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் நித்திய கல்யாணியின் மகரந்தத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

ஆம்பூரில் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய ஆம்பூர் புத்தக கண்காட்சியில் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் மடிப்பு நுண்ணோக்கி பயிற்சி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நானும் பயிற்சி வழங்குவதற்கு சென்றிருந்தேன். அங்கே பங்கேற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பெரும்பான்மையானவர்கள் பெண்களாக இருந்தனர். இது பெரும் மகிழ்ச்சியை அளித்தது. அது மட்டுமல்லாது பெரும்பான்மையான பெண் ஆசிரியர்கள் இஸ்லாம் மக்களாக இருந்தது என் மகிழ்ச்சியை இரட்டிப்பாகியது. அதில் ஒரே ஒரு ஆண் ஆசிரியர் மட்டுமே கலந்து கொண்டார். ஒரு புது அனுபவமாக இருந்தது….

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி

சென்னையில் உள்ள சுவாமிநாதன் பவுண்டேசன் ஏற்பாடு செய்திருந்த மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சியில் 60 சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சியில் மாணவர்களும் ஆசிரியர்களும் உற்சாகமாக பங்கேற்றனர்.

அரிசிக்குள் இருந்த வண்டு

இந்திரா சமைக்க அரிசி எடுக்கும் போது அதற்குள்ளிருந்து ஒரு வண்டு வெளியே வந்தது. அதனை எடுத்து மடிப்பு நுண்ணோக்கியின் கீழ் வைத்துப் பார்த்து அதனை பதிவு செய்தேன். அற்புதமாக இருந்தது.

அரிசிக்குள் வளர்ந்த புழு

இந்திரா சமைப்பதற்காக அரிசியை எடுத்தாள். அதற்குள் சில அரிசிகள் இணைந்து இருந்தன. அதனை தனியே எடுத்து வைத்தாள். நான் அதனை எடுத்து உற்று பார்த்த போது அதற்குள் ஒரு புழு இருந்தது. அதனை மடிப்பு நுண்ணோக்கியின் கீழ் வைத்து பதிவு செய்தவைதான் இவைகள்.

எறும்பின் பாகங்கள்

காலையில் எழுந்த போது என் வேஷ்டியில் எறும்பு ஒன்று இறந்த நிலையில் ஒட்டியிருந்தது. அதன் தலையை தேடினேன் தெரியவில்லை. இருந்த பகுதியை மடிப்பு நுண்ணோக்கியில் வைத்து பதிவு செய்தேன். அது உங்கள் கவனத்திற்கு

இனிபில் பூத்த பூஞ்சை

01.12.2019 ஞாயிறு மதுரையில் கடுமையான மழை. நான் பெரியகுளம் போக வேண்டிய நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு வீட்டில் இருந்தேன். அடுப்படி ஒரு மிகப் பெரிய பரிசோதனை கூடம். நான் அதற்குள் தேடிய போது சாப்பிடாமல் வைத்திருந்த இனிப்பின் மீது பூஞ்சை வளர்ந்திருந்ததை பார்க்க முடிந்தது. அதனை பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என்று எடுத்துக் கொண்டேன். மடிப்பு நுண்ணோக்கியின் கீழ் வைத்து பார்த்த போது அற்புதமாக இருந்தது. முத்துக்களை சரம் போல் கோர்த்து வைத்தார் போல் தெரிந்தது. வண்ணமாக…

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வு

மதுரை மாவட்டத்தில் 27வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் இனியன் மற்றும் முதின்ஸ் இருவரும் மடிப்பு றுண்ணோக்கி குறித்த ஆய்வினை சமர்ப்பித்தனர். தமிழக அரசு வெளியிட்டுள்ள பாட நூலில் உள்ள நுண்ணோக்கியின் மூலம் காண வேண்டியவைகளை மடிப்பு நுண்ணோக்கியின் மூலம் குழந்தைகளே செய்து பார்க்க முடியும் என்பதை உறுதி செய்துள்ளார். இதற்கான தலைப்பாக புதிய கண்டுபிடிப்பான மடிப்பு நுண்ணோக்கி – அறிவியல் கல்வி வளர்ச்சிக்கு நீடித்த நிலைப்புற்றிருக்கும் என்ற வகையில் செய்துள்ளர். அற்புதமான ஆய்வு .