Author: Eden Educational Resource Centre
தண்ணீரில் கைரைந்திருந்த பிளாஸ்டிக்
இருவாச்சி மரத்தின் மகரந்தம்
டில்லி ஐஐடி நடை பயணத்தில் பல வண்ண இருவாட்சி மரங்களை பார்த்தோம். அதில் வெள்ளை நிற இருவாச்சியின் மகரந்தம் தான் இது. இதை இரண்டு வகையில் பதிவு செய்துள்ளோம். ஒன்று ேலிருந்து வெளிச்சத்தை உள் செலுத்தி பதிவு செய்தது. மற்றொன்று வழக்கம் போல பின்பக்கம் வெளிச்சம் செலுத்துவது என்ற வகையில் பதிவு செய்துள்ளோம். இன்னும் பயிற்சி தேவை.
மகரந்தம்
சென்னையில் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்பதற்கா டில்லி IITயில் தங்கியிருந்தோம். பொதுவாக தங்கியிருந்த இரண்டு நாளும் பறவைகள் கண்டறிதல். மாதிரிகளை சேகரித்தல் போன்ற செயல்களில் நான்,சொனாலி, அக்ஷதா ஆகியோர் ஈடுபட்டோம். அப்போது சில பூக்களின் மகரந்தங்களை பதிவு செய்தோம். அதில் ஒன்று தான் இது. இது அற்புதமான வடிவத்தில் உள்ளது. உண்மையில் இதற்கு முன்பு இது போன்று முடக்கத்தான் பூவில் பார்த்த ஞாபகம்.
முன் தயாரிப்பு.
பயிற்சிக்கு முன்பாக நாங்கள் தங்கியிருந்த வளாகத்திற்குள் மாதிரிகளை சேகரித்தோம் இறந்து இருந்த தேனீக்களில் சிலவற்றை பார்த்தோம். ரபீக் சில புதிய வழிமுறைகளில் படங்கள் பதிவு செய்வதை கற்றுக்கொடுத்தார். அற்புதமாக இருந்தது. புதிய வகையில் பயணிக்க அது ஊக்கப் படுத்தியது.
புலன்செகர் UP பயிற்சி.
உத்ரப்பிரதேசம் புலன் செகரில் உள்ள ஆசிரியர் பயிற்சி மையத்தில் 12.02.22 அன்று 90 ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர். இது நான்கு அறைகளில் ரபீக், சொனாலி, அக்ஷதா ஆகியோருடன் நான் இணைந்து பயிற்சி வழங்கினோம். ஆசிரியர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். இதில் கடந்த ஐந்தாண்டு பயணத்தில் கண்டறியதாத டடாடிகிரேட் என்கிற மிகவும் அறிய நுண்ணுயிரியை ரபீக் கண்டறிந்தார் .. பயிற்சியாளர்களும் மகிழ்ந்தனர்.
வளர்க்கப்பட்ட பாசி
அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற கண்காட்சியின் போது அம்மாணவர்கள் வளர்த்திருந்த பாசிகளை மடிப்பு நுண்ணோக்கியில் பதிவு செய்தது.
தேசிய அறிவியல் தொடர் பயிற்சி
தேசிய அறிவியல் தின தொடர் செயல்பாடாக திருச்சி பிசப் கல்லூரியில் 23, 25, 26 ஆகிய தேதிகளில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை கல்லூரி விலங்கியல் துறைத் தலைவர் செய்திருந்தார்.
தேசிய அறிவியல் தினம் – கண்காட்சி.
தேசிய அறிவியல் தினத்தை ஈடன் சைன்ஸ் கிளப் பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து மடிப்பு நுண்ணோக்கியுடன் கொண்டாடியது. மதுரையில் அமெரிகன் கல்லூரியில 23, 24, 25 பிப்ரவரி ஆகிய தேதிகளில் நடத்தியது. இதில் 5000 க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் கண்டுமகிழ்ந்தனர். இந்த நிகழச்சியை தொடர்ச்சியாக முதின்ஸ், சன்மதி, இந்திரா கார்த்திகா ஆகியோர் செய்தனர். 24ம் தேதி மடிப்பு நுண்ணோக்கி குறித்த விளக்க உரை நிகழ்த்தினேன். 200க்கும் மேற்பட்ட…
தேசிய அறிவியல் தினம் தொடர் பயணம்.
இந்த ஆண்டு தேசிய அறிவியல் தினத்தை தொடர்ந்து Fold scope ஐ முடிந்த அளவிற்கு தமிழகம் முழுவதும் எடுத்துச் ெசெல்வதின் தொடர்ச்சியாக டார்வின் தினத்தன்று உச்சப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் மடிப்பு நுண்ணோக்கி விளக்கம் கொடுக்கப்பட்டது.
தக்காலித்தோல்
பள்ளியில் கிடைத்த அந்துப்பூச்சி.
பள்ளியில் இறந்துகிடந்த அந்துப்பூச்சியினை அமிர்த அக்ஷயாவும், கவியக்ஷயாவும் எடுத்து வந்து இதனை Fold Scope ல பார்க்கலாமா என்று கேட்டனர். உடனே செயலில் இறங்கினோம்.
https://youtube.com/shorts/qZsOMc5-Du4?feature=share