விடுமுறை தினத்தில் ஒரு நாள்

அன்று பள்ளிக்கு விடுமுறை. இனியன் என்னுடன் ஆசிரியர் பயிற்சிக்கு வந்தான். வீட்டில் யாரும் இல்லை. அவனுடைய அம்மாவும் அக்காவும் மற்றொரு பயிற்சிக்கு சென்றுவிட்டனர். அதனால் என்னுடன் வந்துவிட்டான். நானும் அவனை அழைத்துச் சென்றேன். நான் வகுப்பில் இருக்கும் போது அவன் அந்த கிராமத்தைச் சுற்றி ( திருமங்கலம்) மடிப்பு நுண்ணோக்கியை எடுத்து பதிவு செய்து வந்தான் அவற்றில் ஒன்றுதான் இது. இது மரம்போல் பச்சை நிறத்தில் இருக்கும். மதுரையில் பரவலாக காணப்படும். பெரும்பாலும் நீர் நிலைகள் உள்ள பகுதியில் காணப்படும். அதன் மகரந்தத்தை பதிவு செய்தான். மகரந்தம் தெளிவாக பதிவு செய்வது எப்படி என்ற கேள்வி நிறைய பேருக்கு இருக்கிறது. அதற்கான வீடியோவும் அவன் எடுத்து வந்து அசதிவிட்டான்.

Leave a Reply