எறும்பு கூட்டினை இணைக்கும் வலை

நேற்று காலை எறும்பு மரத்தில் இலைகளைக் கொண்டு கூடு கட்டியிருந்தது. பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாக இருந்தது. உண்மையில் உயிரினங்கள் எவ்வளவு திறன்களை கொண்டுள்ளது என்பதை இதன் செயல்பாட்டின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். பூச்சிகளின் உலகம் மிகவும் அற்புதமான உலகம் என்பதற்கான எடுத்துக்காட்டுதான் இது.

எறும்புகள் இலைகளை இணைப்பதற்கு ஏதோ ஒரு திரவத்தை பயன்படுத்தி எட்டுகால் பூச்சி போல வலையை பிண்ணி இணைத்து இருந்தது. இதனை என்னுடைய முகநூலில் பதிவிட்டிருந்தேன். முனைவர் மனுபிரகாஷ் அதனைப் பார்த்துவிட்டு அந்த வெப் எப்படி இருக்கிறது என்பதை மடிப்பு நுண்ணோக்கியின் கீழ் வைத்துப் பார்க்க ஆசைப்பட்டார். அதனை என் மகள் முதின்ஸ் இடம் தெரிவித்தேன். அவள் நான் செய்கிறேன் என்று அதனை பதிவு செய்தாள். அதுதான் இந்த படங்கள்.

நாங்கள் வலையின் ஒரு பகுதிய எடுத்து வந்த பின்னர் ஒரு சில நிமிடங்களிலேயே அந்த இடத்தை வலைகளால் பிண்ணி மறைத்துவிட்டன எறும்புகள். மேலும் அவை வேறு எதுவும் தாக்காத வகையில் அந்த வலை பின்னப்பட்ட பகுதியில் காவல் காத்து இருந்ததையும் பார்க்க முடிந்தது. அற்புதமான நிகழ்வு அது.

Leave a Reply