சத்திரபுளியங்குளத்தில் மடிப்பு நுண்ணோக்கி அறிமுகம்

சத்திர புளியங்குளம் மதுரையிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு எனது நண்பர் கோபால் வருடம் தோறும் கிராமத்து கோவிலுக்கு பொங்கல் விழா நடத்துவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் அதற்கான ஏற்பாட்டை செய்திருந்தார். அந்த கிராமத்தில் 50க்கும் மேற்றபட்ட குடும்பங்கள் இருந்த நிலையில் தற்பொது 5 குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். விவசாயம் பொய்து போனதால் அனைவரும் வேலை தேடி நகர் புரங்களுக்கு நகன்று சென்றுவிட்டனர். அந்த ஊரில் இருந்த மக்களுக்கு கோவில் சாமிகும்பிடும் அதே நேரத்தில் மடிப்பு நுண்ணோக்கியை அறிமுகம் செய்து வைத்தேன். அதனை பார்த்து அனைவரும் அதிசயத்து போனார்கள். இப்படி பல்வேறு கிராமங்கள் சுருங்கி வருவதை பார்க்க முடிகிறது.

Leave a Reply