அறிவியல் பலகை

இந்திய அரசின் விஞ்ஞான் பிரசார் அமைப்பு இந்தியா முழுவதும் அறிவியல் விழிப்புணர்வை அந்த அந்த மாநில மொழிகளில் எடுத்தச் செல்லுவதற்கான முன்னெடுப்பை எடுத்துள்ளது. இதற்காக தமிழகத்தில் அறிவியல் பலகை என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அமைப்பில் அறிவியலை மக்களுக்க எடுத்துச் செல்லும் தன்னார்வலர்களுக்கான இரண்டு நாள் கருத்தரங்கம் சென்னை அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆக.3,4 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்களுக்க அறிவியல் பிரச்சாரத்தில் மடிப்பு நுண்ணோக்கியின் பங்கினை விளக்கி கூறினேன். மேலும் ஆர்வம் உள்ளவர்களுக்கு அதனை பயன்படுத்துவதற்கான பயிற்சியும் வழங்கினேன். பலரும் இதனை அற்புதமான கருவி என புகழ்ந்தனர்.

Leave a Reply