ரயில் பயணத்தில்

கடந்த 12,13 ஆகிய தேதிகளில் களப்பணியில் சிறந்த விப்நெட் கிளப்க்கு சான்றிதழ் மற்றும் பயிற்சிக்கான நிகழ்ச்சியை மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார் குஜராத்தில் உள்ள ராஜ்காட் மாவட்டத்தில் ஆர்பிட் கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்தது. அலகாபாத்திலிருந்து ராஜ்காட்டுக்கு 5 மணிநேரம் ரயில் பயணம். என்னுடைய சீட்டுக்கு எதிரே ஒரு தம்பதியினர் தன்னுடைய குழந்தையோடு பயணம் செய்தனர். அந்த குழந்தை கையில் ஒரு மொபைல் வைத்திருந்தது. அதை பார்த்துக்கொண்டே வந்தது. அக்குழந்தைக்கு 4 அல்லது 5 வயது இருக்கும். இப்போதே இவ்வளவு ஈடுபாடோடு மொபைல் பார்ப்பது என்பது கண்ணிற்கும் மனதிற்கும் கெடுதிஎன்று எனக்கு தோன்றி அவளிடமிருந்து மொபைலை வாங்குமாறு அவளுடைய அம்மாவிடம் சொன்னேன் அவள் தர மறுத்து அழ ஆரம்பித்துவிட்டாள். அவளை அதிலிருந்து கவனத்தை திருப்புவதற்காக ஓரிகாமியில் ஒரு பறவை செய்து அதன் இறகுகள் அடிப்பது போல செய்து அவளிடம் கொடுத்தேன். அவள் அதை கண்டு மொபைலை விட்டுவிட்டு என்னுடன் விளையாட ஆரம்பதில்தாள். தொடர்ந்து அவங்கே உள்ளவர்களும் தங்கள் குழந்தைகளை அருகில் அனுப்பிவைத்தனர். நான் பெரியவர்களுக்கும் என்னிடம் ஒரு பொருள் இருக்கிறது என்று சொல்லி மடிப்பு நுண்ணோக்கியை விளக்கி அதற்குள் ஒரு பொருளை வைத்துக் காட்டினேன். கம்பார்ட் மெண்டே மகிழ்ந்து போனது. 5மணிநேரம் போனதே தெரியவில்லை.

Leave a Reply