வண்ணத்துப்பூச்சியின் இறகு

இன்று மாலை பரத் பாபு மையத்திற்க வந்தான். அவன் கையில் பென்சில் பாக்ஸ் இருந்தது. திறந்தான். உள்ளே இறந்து போன வண்ணத்துப்பூச்சி இருந்தது. சார் இதை ஃபோல்ட் ஸ்கோப்பில் பார்க்கலாம். கண்களை பார்க்கலாம் என்றான். நாங்களும் தயாரானோம். ஆனால் அவன் எடுத்து வைக்கும் போதே தலை நொறுங்கிவிட்டது. இறகை தவிற மற்றவை யை சிலேட்டில் வைக்கும் போதே நொறுங்கி போனது. அவன் மிகவும் வாடிப் போனான். ஆனாலும் மனம் தளராமல் இறக்கையை வைத்து பதிவு செய்தான். அதுவுமே ஆச்சரியமாக இருந்தது. வெளியே மஞ்சள் நிறமாக இருந்ததை உள்ளே பார்க்கும் போது தனிதனி செதில்களாக இருந்தது. இந்த செதில்கள் தான் ஒன்றிணைந்து இப்படி நமக்கு ஒரு வண்ணமாக தெரிகிறது என்றான். ஆம் என்றேன். இறக்கையில் இரண்டு வண்ணங்கள் மட்டுமே இருந்தன. ஒன்று மஞ்சள் மற்றொன்று கருப்பு. பரத்பாபுவின் ஆசை வண்ணத்துப் பூச்சியின் கண்களை பார்பதுதான். ஞாயிறு அன்று முயற்சிக்கலாம் என்று முடிவு செய்துள்ளான். மடிப்பு நுண்ணோக்கி மாணவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது.IMG_20160810_183326 IMG_20160810_203448 IMG_20160810_203800 IMG_20160810_203800_1 IMG_20160810_204135 IMG_20160810_204143

Leave a Reply