கடந்த ஞாயிறு அன்று சென்னை தரமணியில் உள்ள கணிதவியல் நிறுவனத்தில் நடைபெற்ற துளிர் எழுத்தாளர்களுக்கான பயிற்சி முகாமிற்கு முதின்ஸ், இனியன் வந்திருந்தனர். உடன் மடிப்பு நுண்ணோக்கியையும் எடுத்து வந்திருந்தனர். நிறுவனத்தின் விடுதியில் 10க்கும் மேற்பட்ட மூலிகையை பராமரித்து வருகின்றனர். காலையிலேயே முதின்ஸ் மூலிகைகளை படம் எடுத்துக் கொண்டார். பின்னர் அந்த மூலிகைகளில் ஒன்றான வல்லாரை கீரையை மடிப்பு நுண்ணோக்கியில் வைத்து பதிவு செய்தனர் இனியனும் முதின்ஸ்ம். முகாமிற்கு வந்திருந்தவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். அற்புதமான அனுபவம் என பகிர்ந்து கொண்டனர்.
Fantastic job at CMI. Keep it up.