இனிபில் பூத்த பூஞ்சை

01.12.2019 ஞாயிறு மதுரையில் கடுமையான மழை. நான் பெரியகுளம் போக வேண்டிய நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு வீட்டில் இருந்தேன். அடுப்படி ஒரு மிகப் பெரிய பரிசோதனை கூடம். நான் அதற்குள் தேடிய போது சாப்பிடாமல் வைத்திருந்த இனிப்பின் மீது பூஞ்சை வளர்ந்திருந்ததை பார்க்க முடிந்தது. அதனை பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என்று எடுத்துக் கொண்டேன். மடிப்பு நுண்ணோக்கியின் கீழ் வைத்து பார்த்த போது அற்புதமாக இருந்தது. முத்துக்களை சரம் போல் கோர்த்து வைத்தார் போல் தெரிந்தது. வண்ணமாக தெரியவில்லை. அதன் அழகை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். நீங்கள் உங்கள் அனுபவத்தை பதிவு செய்யலாம் .

Leave a Reply