ஆம்பூரில் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய ஆம்பூர் புத்தக கண்காட்சியில் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் மடிப்பு நுண்ணோக்கி பயிற்சி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நானும் பயிற்சி வழங்குவதற்கு சென்றிருந்தேன். அங்கே பங்கேற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பெரும்பான்மையானவர்கள் பெண்களாக இருந்தனர். இது பெரும் மகிழ்ச்சியை அளித்தது. அது மட்டுமல்லாது பெரும்பான்மையான பெண் ஆசிரியர்கள் இஸ்லாம் மக்களாக இருந்தது என் மகிழ்ச்சியை இரட்டிப்பாகியது. அதில் ஒரே ஒரு ஆண் ஆசிரியர் மட்டுமே கலந்து கொண்டார். ஒரு புது அனுபவமாக இருந்தது. பயிற்சிகள் பெரும்பாலும் அரங்குகளில் நடைபெறுவதால் போதுமான மாதிரிகளை நாம் பெற்றுக்கொள்ள முடியாமலும் பார்க்க முடியாமலும் போகிறது. பயிற்சிகள் பூங்கா போன்ற பகுதிகளிலும் வயல் மற்றும் காடுகள், செடிகொடிகள் நிறைந்த பகுதிகளிலும், நீர்நிலைகளின் அருகிலும் இருக்கும் போது போதுமான மாதிரிகளை பார்த்து அதிசயக்கவும், பதிவு செய்யவும் ஏதுவாக இருக்கும். நாம் பயிற்சியின் போது போதுமான மாதிரிகளை முன்பே சேகரித்து வைத்துக்கொள்ளுவது இன்னும் சிறப்பாக இருக்கும். பயிற்சி பெற்றவர்களை மேலும் ஆர்வத்தை தூண்ட முடியும்.

Leave a Reply