உலக எழுத்தறிவு தினத்தில் மடிப்பு நுண் ணோக்கிப் பயிற்சி.

செப்டம்பர் 8 உலக எழுத்தறிவு தினத்தில் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சியை துளிர் அறிவியல் மையத்துடன் இணைந்து சுமார் 30 மாணவர்களுக்கு ஈடன் சைன்ஸ் கிளப் மாணவன் இனியன் பயிற்சி வழங்கினான். பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள் முழுக்க விவசாய கூலி வேலை செய்யும் பெற்றோர்களின் குழந்தைகள். இவர்கள் மதுரையிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தங்கலாச்சேரி என்ற குக்கிராமத்திலிருந்து டிராக்டரில் வந்திருந்திருந்தனர். இதற்கான ஏற்பாட்டை முத்துக்கிருஷ்ணன் ஆசிரியர் செய்திருந்தார். இவர்கள் தங்களது பகுதியில் தொடங்கப் பட்டுள்ள விவசாய பயிர்களை தாக்கும் நுண்ணுயிர்கள் மற்றும் பூச்சிகள் குறித்து மடிப்பு நுண்ேணாக்கியில் பதிவு செய்ய உள்ளனர். இதனை தொடர்ச்சியாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழலில் மாணவர்கள் அறிவியல் செயல்பாட்டில் ஈடுபடுவது பெரிதும் பயனைக் கொடுக்கும்.

Leave a Reply