ஈடன் சைன்ஸ் கிளப் மதுரை துளிர் அறிவியல் மையத்துடன் இணைந்து 4 மாதத்திற்கான மடிப்பு நுண்ணோக்கி செயல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்னெடுப்பை எடுத்துள்ளது. இதற்கான வழிகாட்டியாக ஆசிரியர் முத்துக்கிருஷ்ணன், மையத்தின் ஒருங்கிணைப்பாளர் காமேஷ் பொருப்பெடுத்து செயல்பட்டுவருகின்றனர். விளிம்பு நிலையில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களை தேர்வு செய்வது என முடிவு செய்து அதில் இரண்டு கிராமத்து மாணவர்களை நாம் தேர்வு செய்துள்ளோம். இதன் நோக்கமாக இரண்டு விஷயங்கள் முன்வைத்து தொடர் நடைவடிக்கையில் ஈடுபடுவது
1. கள ஆய்வுப்பணியாக விவசாய நிலங்களில் தாவரங்களில் காணப்படும் நோய்க்காரணிகளை மடிப்பு நுண்ணோக்கி மூலம் ஆய்வு செய்ய முயற்சிப்பது. அதன் வழியில் விவசாயிகளுக்கு உதவி செய்வது. 2. பாடநூலில் முதலாம் வகுப்புமுதல் 10ம் வகுப்புவரை கொடுக்கப்பட்டுள்ள நுண்ணுயிர்கள் குறித்த தகவல்களை மடிப்பு நுண்ணோக்கியின் மூலம் கண்டறிந்து பதிவு செய்வது. எனவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.. ஆய்வுப்பணிகள் தொடர்ந்து நான்கு மாதங்கள் மேலாண்மை செய்வது என்றும் ஆலோசிக்கப்பட்டது.

தேர்வு செய்யப்பட்ட கிராமங்கள் (திருமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட இரண்டு கிராமங்கள்.)

1. தங்களாச்சேரி( மதுரையிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் உள்பகுதியில் இருக்கும் குட்கிராமம்.

2. செங்கப்படை ( மதுரையிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் உள்பகுதியில் இருக்கும் குட்கிராமம். )

முதல்கட்டமாக கடந்த செப்டம்பர் 08ம் தேதி மையத்தில் 30 மாணவர்களுக்கு மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி வழங்கப்பட்டது. அதில் தேர்வு செய்யப்பட்ட 25 மாணவர்களுக்கு தொடர் பயிற்சி வழங்குவது எனவும் முடிய செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு மடிப்பு நுண்ணோக்கியை பயன்படுத்தி தாங்கள் எதெல்லாம் பார்க்க நினைக்கிறீர்களோ அதை பதிவு செய்ய வேண்டும். அதனை உங்கள் நோட்டில் வரைபடமாக வரையவேண்டும் என்ற வேண்டுகோள் வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாணவர்கள் தங்களது பகுதில் காணப்பட்ட பல்வேறு விஷயங்களை பதிவு செய்து ஒரு சில மாணவர்கள் என்னுடைய வாட்சப்க்கு அனுப்பி வைத்திருந்தனர். ஒரு சில மாணவர்கள் தண்ணீர் மாதிரிகளை பதிவு செய்யவும் முயற்சித்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. தொடர் நடவடிக்கையாக

இரண்டாம் கட்டமாக களப்பணியாக நாங்கள் தங்களாச்சேரி மாணவர்களை 20.09.2020 அன்று நானும் காமேஷ்ம் சந்தித்தோம். கிராமத்து மக்கள் பயன்படுத்தும் நாடகமேடையிலேயே எங்கள் சந்திப்பு நடந்தது. மொத்தம் 19 மாணவர்களில் 12 மாணவர்கள் தாங்கள் வரைந்த மடிப்பு நுண்ணோக்கி வரைபடங்களுடன் வந்திருந்திருந்தனர். பெரும் மகிழ்ச்சி அளித்தது. அதில் அதிகபட்டசமாக 47 படங்களும் குறைந்தது 12 படங்களும் மடிப்பு நுண்ணோக்கியை பார்த்து வரைந்திருந்தனர். பெரும்பான்மையான மாணவர்கள் தாங்கள் எந்த பொருளிலிருந்து பார்த்தோம் எப்படி இருந்தது என்று படங்களை மட்டும் வரைந்திருந்தனர். ஒரு மாணவன் தான் பார்த்தை டிஸ்கிரைப் பண்ணி எழுத்தியிருந்தான். பெரும் மகிழ்ச்சியை வழங்கியது. ஒரு சில மாணவர்கள் வண்ணங்களை கொண்டும் வரைந்திருந்தனர். அவர்கள் செய்திருந்ததை பார்க்கும் போது அவர்கள் போகஸ் ரேம் பயன்படுத்துவதில் தடுமாறுவதை பார்க்க முடிந்தது. அதனால் அதன் பயன்பாடு மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து பயிற்சி அளித்தோம். மேலும் சில பதிவுகளை அங்கேயே செய்ய பயிற்சி அளித்தோம். சிலேடு தயாரிப்பதில் அதை உள்வைப்பதில் அவர்களுக்கிருந்த இடர்பாடுகளை தீர்த்து வைத்தோம். மேலும் சிலேடை சிறப்பா தயாரிப்பது எப்படி என்பதையும் கற்றுக்கொடுத்தோம். பயிற்சியில் மதிய உணவை மறந்துவிட்டனர். நாங்கள் முடிக்கும் போது 3 மணியை கடந்திருந்தது. அடுத்த அவர்கள் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு கொடுத்துவிட்டு இரண்டாம் கட்ட சந்திப்பை முடித்துக் கொண்டு திரும்பினோம். தொடர் பயிற்சியும் சந்திப்பும் உற்சாகத்தை அளிக்கிறது.

Leave a Reply