உருளைக் கிழங்கிற்குள் இருந்த வண்ணப்பகுதி

களப்பயணம் ஒரு வாரமாக சென்று கொண்டிருந்த காலத்தில் சபரீஸ் வீட்டிலிருந்து ஒரு உருளைக் கிழங்கை காலையில் எடுத்து வந்தான். அது காலை 8 மணி இருக்கும். நான் பொதுவாக பள்ளிக்கு 8.30 மணிக்கு மேல்தான் செல்வோம். அவனால் பொருக்க முடியாமல் எனக்கு போன் செய்தான். நான் கொஞ்ச நேரம் காத்திருக்கச் சொல்லிவிட்டு பள்ளிக்கு சற்று வேகமாகவே புறப்பட்டுச் சென்றேன். அவன் கையில் உருளைக்கிழங்கோடு நின்று கொண்டிருந்தான். அவனுடன் அழகரும் இருந்தான். நான் பள்ளியை திறந்ததும் ஓடிப் போய் மடிப்பு நுண்ணோக்கி டப்பாவை எடுத்துவைத்து பார்க்க ஆரம்பித்துவிடனர்.

அம்மா சமைக்கும் போது ஒருஉருளைக்கிழங்கில் வய்லட் கலரில் ரேகை ரேகையாக இருந்தது அதனை மடிப்புநுண்ணோக்கியில் வைத்துப் பார்க்கலாம் என்று எடுத்து வைத்தேன். அதான் உங்களுக்கு போன் செய்தேன் என்றான்.

சபரீஸ், அழகர் இருவரும் உருளைக்கிழங்கை பதிவு செய்தனர். தொடர்ச்சியான பயிற்சி குழந்தைகளுக்கு பெரிதும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது என்பதை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது.

Leave a Reply