வெங்காய தோல் செல் பல வகை பதிவு

தேர்தல் நேரம் என்பதால் பள்ளியில் நான் மட்டும் தனியாக இருந்தேன். வாசிப்பு சிறிது நேரத்தில் சோர்வை ஏற்படுத்தியது. பள்ளியில் ஒரு வெங்காயம் இருந்தது. அதன் தோல் செல்களை பதிவு செய்யலாம் என்று தோன்றியது. அதற்காகன ஏற்பாட்டில் ஈடுபட்டபோது பல முறை இவற்றை செய்திருக்கிறோம். ஏதேனும் புதிய வழிகளில் செய்து பார்க்கலாம் என்று தோன்றியது. அதன் அடிப்படையில் சில புதிய வழிமுறைகளில் பதிவு செய்தவைதான் இவைகள். அவற்றின் பட்டியல்

  1. முதலில் வெங்காயத்தின் காய்ந்த தோல் பகுதியில் வெளிப்படையாக தெரியக்கூடிய நகப்பூச்சை தடவினேன். சிறிது நேரத்திற்கு பிறகு அதனை செலோ டேப்பில் ஒட்டி எடுத்து அதனை சிலேடில் ஒட்டி மடிப்பு நுண்ணோக்கியில் பதிவு செய்தேன்.
  2. இரண்டாவது வகையில் வெங்காயத்தை உரித்து உள்பகுதி தோலை மெதுவாக எடுத்தேன். அது மெல்லிய வெள்ளை மற்றும் வெளிரிய நிரத்தில் கிடைத்தது அதனை மடிப்பு நுண்ணோக்கியில் வைத்து பதிவு செய்தேன்.
  3. உரிக்கப்பட்ட வெங்காயத் தொலின் உள் பகுதியில் நெகப்பூச்சை பூசி எடுத்து அதனையும் பதிவு செய்தேன்.
  4. 2015ம் ஆண்டு சாம் மடிப்பு நுண்ணோக்கி பயிற்சி கொடுத்த போது இரண்டு டப்பாக்கள் கொடுத்தார். 1. crystal violet 2. glycerin இவை இரண்டையும் எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரியாமல் இருந்தது. சில கல்லூரிகளுக்கு போகும் போது சில விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. அதன் அடிப்படையில் crystal violet ஐ பயன்படுத்தி பார்க்கலாம் என்று இன்று பயன்படுத்திப் பார்தேன். அதனையும் பதிவு செய்துள்ளேன்
  5. முதலில் சில துளிகள் crystal violet ஐ ஒரு சிறிய தட்டில் வைத்துக் கொண்டேன். மற்றொரு தட்டில் தண்ணீர் வைத்துக் கொண்டேன். வெங்காயத்தோலினை எடுத்து முதலில் தண்ணீரில் இட்டு மெதுவாக அலசினேன். பின்னர் அதனை
    crystal violet ல் மூழ்கி எடுத்து மீண்டும் தண்ணீரில் விட்டு அலசி எடுத்தேன். அதனை கண்ணாடி சிலேட்டில் வைத்து சிறிது நேரம் வெயிலில் சூடேற்றினேன். பின்னர் அதனை மடிப்பு நுண்ணோக்கியில் வைத்து பதிவு செய்தேன். அற்புதமான வண்ணத்தில் வெங்காயத்தின் செல் சுவர்களை பதிவு செய்ய முடிந்தது. சில இடங்களில் வெளிரிய வண்ணத்தில் வண்ணம் ஏறியிருந்தது. பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சி கரமாக இருந்தது. இதனையும் இங்கே பதிவு செய்துள்ளேன். ஆங்கிலத்தில் என்னால் தெளிவாக விளக்க இயலாததால் தமிழில் எழுதியுள்ளேன். மற்றவர்களும் இது போன்று முயற்சி செய்யலாம்.

Leave a Reply