இலை துளைகளை பதிவு செய்வதற்காக இலைகளை தேர்வு செய்தபோது தூதுவளை இலையை எடுத்தேன். அதன் பின் பகுதியில் நிறைய நுண் பூச்சிகள் இருப்பது போல தோன்றியது. மேலும்ஒவ்வொரு இலைக்கும் பின்னால் ஒரு நுண் உலகம் இருப்பதை பார்க்க முடிந்தது. அதன் அடிப்படையில் அதன் பகுதியில் இருந்ததை பதிவு செய்தேன். இரண்டு வகையிலான உயிருடன் பூச்சிகளை மடிப்பு நுண்ணோக்கியில் பதிவு செய்ய முடிந்தது. மேலும் சில பூச்சிகளின் சிதைந்த உடல்களை காண முடிந்தது. ஒரு பூச்சியின் இறகள் இருந்தன. அந்த பூச்சியின் தலை இருந்ததை பதிவு செய்ய மடிந்தது. மேலும் அதன் இறகில் கூட சில முட்டை போன்று ஒன்று காணப்பட்டது. மஞ்சள் நிறத்தில் மகரந்தம் போன்ற ஒன்று பல இடங்களில் காண முடிந்தது. இவை ஒவ்வொரு இலைக்கும் வேறு படலாம் என்றே தோன்றுகிறது. முயற்சி செய்யலாம் இலைகளின் பின் உலகம்.
நன்றாக உள்ளதே!