விமலும், தயாளனும்

விமல், தயாளன் இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் தனக்கன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். விமல் 5ம் வகுப்பம், தயாளன்8 ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். கொரான காலத்தில் கடந்த ஓராண்டு காலமாக மாடு மேய்த்து வருகிறார்கள்.

காலை 6 மணிக்கு எழுந்து பாலை எடுத்துக் கொண்டு வீடு வீடாக சென்று விற்பனை செய்கிறார்கள். பின்னர் வீட்டிற்கு வந்து டீ குடித்துவிட்டு மாட்டை ஓட்டிக் கொண்டு மேய்ச்சலுக்கு போகிறார்கள். குறிப்பாக இவர்கள் காலை உணவே டீ மட்டும் தான்.

கடந்த ஒரு வாரமாக எங்கள் வீட்டுப் பகுதியிலும் மேய்ச்சலுக்கு வருகிறார்கள். அப்போதுதான் அவர்களை நான் சந்தித்து பேசினேன். தற்போது மூன்று நாட்களாக மடிப்பு நுண்ணோக்கியை கையாள பயிற்சி பெற்று வருகிறார்கள். இது அவர்களை வெகுவாக பிடித்து உள்ளது.

இன்று அவர்களே சிலேடு தயார் செய்து பதிவு செய்ய கற்றுக் கொண்டனர்.

பள்ளியில்லா காலத்தில் மடிப்பு நுண்ணோக்கி குழந்தைகளுக்கு அறிவியலின் மீது ஆர்வத்தையும், ஆய்வு நோக்கத்தையும், புதிய வழிமுறைகளையும் கண்றிய பெரிதும் உதவுகிறது. இது ஒரு பொக்கிஷம் என்கிறார்கள்.

Leave a Reply