நரிக்குறவர் மாணவர்களுக்க மடிப்பு நுண்ணோக்கி பயன்படுத்தும் பயிற்சி

img_20161208_151726
நரிக்குறவர் மாணவர்களுக்க மடிப்பு நுண்ணோக்கி பயன்படுத்தும் பயிற்சி img_20161208_151723

மூன்று நாள் விடுமுறையின் கடைசி நாள் திருப்பரங்குன்றம் பூங்காவிற்கு செல்வது என முடிவு செய்து நான் முதின்ஸ் இனியன் இந்திரா சென்றோம். செல்லும் போimg_20161208_151746து எங்கள் உடனே ஒரு மடிப்பு நுண்ணோக்கியை எடுத்துச் சென்றோம். முடிந்தவற்றை பதிவு செய்வது. அங்கே யாரேனும் விரும்பி வந்தால் அவர்களுக்க மடிப்பு நுண்ணோக்கியை காட்டுவது என்ற முடிவோடே சென்றோம். காலை 11 மணிக்குச் சென்றோம். 3 மணி வரை பூங்காவிற்குள் இருந்தோம். பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்தும் விளையாடிக்கொண்டும் மடிப்பு நுண்ணோக்கியில் தோன்றியதை பதிவு செய்துகொண்டும் இருந்தோம். யாரும் இது என்ன என்று கேட்டு எங்கimg_20161208_151942 ளை அணுகவில்லை. ஆனாலும் நாங்கள் தொடர்ந்து எல்லோரும் பார்க்கம் இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஒரு சில குழந்தைகளை அழைத்து இதைப் பாருங்கள் என்று காட்ட ஆரம்பித்தோம். குழந்தைகள் ஒரு சிலர் மட்டும் வந்து பார்த்துச் சென்றனர். அதன் பிறகு. ஒரு நரிக்குறவர் குடும்பம் அந்த பூங்காவிற்குள் வந்தது இதை பார்த்து தாங்களும் பார்க்கலாமா என்று கேட்டனர். ம்.. பார்க்கலாம் என்று அவர்களிடம் மடிப்பு நுண்ணோக்கியை காட்டினோம். அடுத்தடுத்து ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனார்கள். ஒரு பறவையின் இறகு. எறும்பின் கால், செம்பருத்தியின் மகரந்தம், நுங்கு பழத்தின் பகுதி, கொன்றை பூவின் மகரந்தம், இப்படி பல வற்றை பார்த்து மகிழ்ந்தனர் அந்த குடும்பம். சுமார் 1 மணிநேரம் எங்களோடு செலவு செய்தனர். அவர்கள் தங்களுக்க கிடைக்குமா? என்று கேட்டனர். கொடுப்பதற்கு வாய்ப்பில்லாமல் போயிற்று. மீண்டும் ஒரு முறை நமக்கு மடிப்பு நுண்ணோக்கி கிடைத்தால் அந்த பகுதியில் இருக்கும் நரிக்குறவர் குழந்தைகளுக்கு ஒரு பயிற்சிimg_20161208_154307 கொடுத்து கொடுக்கலாம்.

அந்த குழந்தைகள் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு, 7ம் வகுப்பு நான்காம் வகுப்பு படிக்கிறார்கலாம். விடுமுறை நாட்களில் தன் சித்தியோடு வந்து இங்கே பிச்சை எடுப்பதை தொழிலாக செய்கின்றனர்.

Leave a Reply