வண்ணத்துப்பூச்சியின் இறகு

31.07.17 மாலை இனியன் தன் பாக்ஸ்ல் கொண்டுவந்த வண்ணத்துப் பூச்சியை மடிப்பு நுண்ணோக்கியில் வைத்து பதிவு செய்தான். இப்போது ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்து எடுத்துவந்தான். அவன் பள்ளி விட்டு வெளியே வரும் போது ரோட்டில் அடிப்பட்டு கிடந்ததாம். அதைத்தான் எடுத்துவந்திருந்தான். இப்போது எதை பார்த்தாலும் மடிப்பு நுண்ணோக்கியில் பார்க்கலாம் என்ற நினைவோடே இருக்கிறான். மகிழ்ச்சி அளிக்கிறது. அவன் பதிவு செய்த சில படங்கள் இத்துடன் இணைத்துள்ளேன். வித விதமான வண்ணத்துப்பூச்சிகளின் இறகுகளை பார்க்க முயற்சித்து வருகிறான். ஆய்வை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக மடிப்பு நுண்ணோக்கி அவனை நகற்றுகிறது.IMG_20170731_202400 IMG_20170731_201958 IMG_20170731_202442 IMG_20170731_202753 IMG_20170731_203036 IMG_20170731_203253 IMG_20170731_203420 IMG_20170731_203442~2

Leave a Reply