கடுகு இலை

இது இன்று இனியன் செய்த பதிவு. வீட்டுத்தோடத்தில் கடுகு விதைக்கப்பட்டுள்ளது. அதன் இலை புதினா போல் இருந்தது. அதை எடுத்து மடிப்பு நுண்ணோக்கியில் வைத்து பார்க்கலாம் என்று சொன்னான். நான் ஒரு இலையை கொடுத்தேன். அதனை பதிவு செய்தான். கடுகு இலைக்கும், புதினா இலைக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக கூறினான். புதினா இலை எங்கேடா பதிவு செய்தாய் என்று கேட்டேன். அதெல்லாம் போன வருடமே பதிவு செய்து பார்த்துவிட்டேன் என்றான்.

அற்புதமான பதிவு இது. இதற்கு முன் இவ்வளவு தெளிவாக அவன் பதிவு செய்யவில்லை.

Leave a Reply