காளாக்காடு- திண்டுகல் மாவட்டம்

காலாண்டு விடுமுறையில்  திண்டுகள் மாவட்டம் செம்பட்டியை அடுத்த காளாக்காடு என்னும் மலை கிராமத்தில் இரண்டுநாள் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி நடைபெற்றது.      இதற்கான ஏற்பாட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திண்டுகல் மாவட்டம் ஏற்பாடு செய்திருந்தது.  இதில் மலைகிராம குழந்தைகள் மற்றும் திருப்பூர், தர்மபுரி, சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களிலிருந்து 30 குழந்தைகள் வந்திருந்தனர். 10 தொண்டர்கள் வந்திருந்தனர். இந்த இரண்டுநாள் பயிற்சியில் மாதிரிகளை சேகரிப்பது எப்படி, அவற்றை எப்படி சிலேடாக்குவது. மடிப்பு நுண்ணோக்கியின் செயல்பாடு மற்றும் எப்படி செய்வது போன்ற செய்முறை பயிற்சி வழங்கப்பட்டது. அத்தோடு மாதிரிகளை எப்படி மொபைலில் பதிவு செய்வது என்பது உட்பட பயிற்சி வழங்கப்பட்டது. இங்கே பல்வேறு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்ட்டன. பெரும்பான்மையான மாதிரிகள் செடி, கொடிகளிலிருந்தும் பூச்சிகளிலிருந்துமே சேகரிக்கப்பட்டன. அவற்றில் பல வகையான பூச்சிகள் மா மற்றும் தென்னை மரங்களுக்கு அடிக்கப்பட்டிருந்த பூச்சிக்கொல்லிகளினால் கீழே விழுந்து கிடந்த பூச்சிகளே அதிகமாக சேகரிக்கப்பட்டது. மேலும் மூலிகை செடிகளின் இலைகள் சேகரிக்கப்பட்டன. பூக்களும் சேகரிக்கப்ட்டன. தண்ணீர் மாதிரிகள் சேகரிக்கப்படவில்லை என்பது மற்றொரு குறையே. சேகரிக்கப்பட்ட அனைத்து மாதிரிகளையும் மடிப்பு நுண்ணோக்கிக்குள் வைத்து பார்க்க முடியவில்லை. 3 மடிப்பு நுண்ணோக்கி மட்டுமே இருந்ததால் முழுமையாக பார்க்க முடியவில்லை.

இந்த பயிற்சி முகாமில் Dr. Dinakaran (Madurai college) பங்கேற்று மாணவர்களுக்க பூச்சிகளினாலும், விலங்குகளினாலும் என்ன என்ன நன்மைகள் உள்ளன. அவற்றை ஏன் பாதுகாக்க வேண்டும் என்பதற்கான விளக்க உரை நிகழ்த்தினார். மாணவர்கள் மற்றும் மலைகிராம குழந்தைகள் வெகுவாக மகிழ்ந்தனர். ஆச்சரியமடைந்தனர். இப் பயிற்சியை இனியன், முனைவர் தினகரன், மொ. பாண்டியராஜன் ஆகியோர் கொடுத்தனர்.

 

Leave a Reply