தோட்டத்தில் ஒரு மாத்

தோட்த்தில் நான் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தேன். சுற்றுசுவரில் ஒரு மாத் உட்கார்ந்திருந்தது. அதனை தொந்தரவு செய்யாமல் ஒரு செலோ டேப்பில் அதன் செதில்களை ஒட்டி எடுத்துக் கொண்டேன். அதனை மடிப்பு நுண்ணோக்கியின் கீழ் வைத்து பதிவு செய்தேன். இதன் செதில்கள் பல்வேறு வடிவத்தில் இருப்பதை பார்க்க முடிந்தது. குறிப்பாக நீண்டும், குட்டையாகவும், ஒல்லியாகவும். குண்டாகவும் இருந்தது. இதற்கு முன் ஒரே மாதிரியான வடிவம் கொண்டதாகவே பார்த்திருக்கிறோம். ஒரே மாத்தில் பல வடிவங்களில் செதில்கள் அமைந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பார்ப்பதற்கும் பரவசத்தை ஏற்படுத்தியது.

Leave a Reply