மடிப்பு நுண்ணோக்கி கண்காட்சி- NCSC2017 Channai

25வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு சென்னை சத்தியபாமா பல்கலைகழகத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழ்நாட்டில் இளம் அறிவியல் விஞ்ஞானிகளை உருவாக்கும் செயலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இளம் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 300 ஆய்வுகட்டுரைகளை 1500 மாணவர்களின் பங்களிப்புடன் சமர்ப்பிக்கப்படும். அப்படி சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகள் தேசிய மாநாட்டில் கலந்துகொள்ளும். 3நாள் நடைபெற்ற இம் மாநாட்டில் 1500 மாணவர்கள் 300 ஆசிரியர்கள் 200 தொண்டர்கள் என சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர். அதில் மடிப்பு நுண்ணோக்கியின் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் ஆசிரியர்கள் மாணவர்கள், ஆய்வு மாணவர்கள் பங்கேற்றனர். மடிப்பு நுண்ணோக்கியின் செயல்பாடு கண்டு ஆச்சரியமுற்றனர். நடைபெற்ற நிகழ்ச்சியில் சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு. இங்கே கண்காட்சியாக வைக்கப்பட்டவை இனியன் காலாண்டு விடுமுறையில் செய்த சின்ன பிராஜெக்ட் தான் இந்த வண்ணத்துப்பூச்சிகளின் செதில்களை பதிவு செய்தது. அதனை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உற்சாகமாகவும் ஆச்சரியமாகவும் பார்த்துச்சென்றனர்.

Leave a Reply