மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி- நாமக்கல் மாவட்டம்

தமிழ்நாடு  நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரப் பாளையத்தில் குழந்தைகளுக்காக இயங்கி வரும் நூலகத்தை சிகரம் என்ற அமைப்பு செயல்படுத்தி வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவர்கள் நூல்களை எடுத்துப் பயன்படுத்தி வருகின்றனர்.  சிகரம் அமைப்புடன் இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 21.01.2018 அன்று ஒரு பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் அப்பகுதியில் படிக்கும் 3ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை உள்ள சுமார் 30 மாணவர்கள் அப் பயிற்சியில் கலந்து கொண்டனர். திருவணாமலை மருத்துவக்கல்லூரியில் பணியாற்றி வரும் மருத்துவர் செந்தில்குமரன் மற்றும் தொலைதொடர்பு துறையில் பயணியாற்றி வரும் சுரேந்திரன் ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்திருந்தனர். அங்கே இருந்த குழந்தைகளுக்கு மடிப்பு நுண்ணோக்கியை தயார் செய்வது குறித்தும் அதனை பயன்படுத்துவது குறித்தும் கற்றுக்கொடுத்தேன். குழந்தைகளும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில்பொது மக்களும் கலந்து கொண்டது கூடுதல் சிறப்பு. இந்த பயிற்சியின் போது மருத்துவர் கூறியது மிகவும் கவனிக்க தக்கது.

இது போன்ற தெளிவான மைக்ராஸ்கோப்பை மருத்துவமனைகளில் கூட பார்ப்பது அறிது. மேலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக மத்திய மருத்துவமனைக்கே வந்து பரிசோதனை செய்யும் நிலையே உள்ளது. இது போன்ற எளிய மைக்ராஸ்கோப் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று கூறியது கவனிக்கதக்கது.

One Comment Add yours

  1. Manu Prakash says:

    Incredible. We can feel the energy in that room..

    Cheers
    Manu

Leave a Reply