ஈரோடு மாவட்டம் பொம்மன்பட்டியில் FOLDSCOPE பயிற்சி

ஈரோடு மாவட்டம் பொம்மன் பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி 01.03.2014 அன்று தேசிய அறிவியில் தின கொண்டாட்டத்தின் போது வழங்கப்பட்டது. அதில் 30 மாணவர்கள் 10 ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஈரோடு பொம்மன் பட்டி நெசவில் புகழ் பெற்ற ஊர். அங்கே உள்ள நெசவாளர்கள் பாரம் பரியமாக ஜமுக்காளத்தை நெய்யக் கூடியவர்கள். அவர்கள் நம் பெயரையே சமுக்காளத்தில் வடித்துக் கொடுக்க கூடிய திறன் படைத்தவர்கள். பட்டில் கூட மணப் பெண்ணின் பெயரையும், மண மகனின் பெயரையும் நெய்து கொடுக்கும் திறன் படைத்தவர்கள். அவர்கள் வசிக்கும் அந்த பகுதியில்தான் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி வழங்கப்பட்டது. ஆசிரியர்களும், மாணவர்களும் உற்சாகமாக பங்கேற்றனர். உதவித்தொடக்கக் கல்வி அலுவர் (அறிவியல்) மிகவும் ஆர்வத்தோடு பங்கேற்றார். உண்மையில் பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

Leave a Reply