மதுரை ராமகிருஷ்ணா மடம் ஆரம்பள்ளியில் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி

இன்று மதுரை ராகிருஷ்ணா மடத்தில் நடைபெற்றுவரும் ஆரம்ப பள்ளியில் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சியும் ஸ்கவுட் பயிற்சியும் நடைபெற்றது. சுமார் 60 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 5ம் வகுப்பு மணவர்கள் வெங்காயத்தின் தோல் பகுதியை வெட்டியெடுத்து மடிப்பு நுண்ணோக்கியின் மூலம் பார்த்து ரசித்தனர். அதனை தொடர்ந்து அவர்களே சில சிலேடுகளை தயார் செய்து பார்த்தனர். எளிதில் கிடைத்த செம்பருத்தி பூவின் மகரந்தம். புள் ளின் உற்பகுதி, இலை துளைகளை பார்த்து ரசித்தனர். மகரந்த தூளைப்பார்த்து கழுத்தில் தொங்கும் தங்க டாலர் போல் இருப்பதாக வர்ணித்தனர். அற்புதமான நிகழ்வு இது.

One Comment Add yours

  1. laksiyer says:

    arpudam. Nice pictures of microscopic objects.

Leave a Reply