மடிப்பு நுண்ணோக்கி உயிரி நடை பயணம் (Foldscope Bio-walk)

மடிப்பு நுண்ணோக்கி உயிரி நடை பயணம்

இன்று(21.05.2018)மாலை3மணிக்கு   மடிப்பு நுண்ணோக்கி உயிரி நடைபயணத்திற்கு திட்டமிட்டோம். இதில் 15 மாணவர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கல்லூரியில் மாணவர்கள் சேருவதற்கான வேலையில் மாணவர்கள் ஈடுபட்டதால் பலர் வரமுடியவில்லை. சுமார் 10 மாணவர்கள் இந்த நடைபயணத்தில் பங்கேற்றோம். இது ஒரு சோதனை முறை நடைபயணம்தான் சுமார் 1.5கிலோமீட்டர் நடை பயணம். இதில் 15க்கும் மேற்பட்ட மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. இதில் சில பூச்சிகளும், மண்புழுவும் அடக்கம். நாங்கள் நடைபயணம் மேற்கொண்ட நேரம் மாலை என்பதால் போதுமான வெளிச்சமின்மையால் சேகரிக்கப்ட்ட அனைத்தையும் பதிவு செய்ய முடியவில்லை. முடிந்த அளவு அதனை பதிவு செய்தோம். இந்த நடைபயணத்தில் பங்கேற்ற எங்கள் குழு உறுப்பினர்கள் முதின்ஸ், இனியன், அருள்முருகன், நாகேஷ்வரன், அமிர்த ஆகாஷ், அபிமணிகண்டன், வேல்முருகன், அருண்பாண்டி, நரேஸ்,  மற்றும் நான் ஆகியோர் கலந்து கொண்டோம்.

இங்கே முக்கியமாக பதிவு செய்ய வேண்டியது வைஷ்ணவி. வைஷ்ணவியின் தாத்தா பொதுவாக அவளை வெளியே விடமாட்டார். ஆனால் தொடர்ச்சியாக எங்களோடு மடிப்பு நுண்ணோக்கியை பயன்படுத்துவதை பார்த்தும், அவள் அவளுடைய தாத்தாவுக்கும் மடிப்பு நுண்ணோக்கியில் பார்ப்பதை காட்டியும் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதன் விளைவு தற்போது அவரே விருப்பத்தோடு எங்களோடு களப் பயணத்திற்கு அனுப்பி வைக்கிறார். இது ஒரு பெரிய மாற்றமாகவே தெரிகிறது. அற்புதமான நிகழ்வு இன்று வைஷ்ணவி பங்கேற்க அனுமதித்தது. ஆனால் அவள் கல்லூரி சேர்க்கைக்கு சென்றுவிட்டதால் இன்று எங்களோடு பங்கேற்க முடியவில்லை.

இந்த களப் பயணம் குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளது. பதிவுகள் கொஞ்சம் என்றாலும் குழுவினரின் உற்சாகம் போற்றதக்கதாக இருந்தது. Foldscope Bio-Walk தொடர்ச்சியாக பல்வேறு இடங்களுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply