ஒரே பூவில் ஒன்றுக்கும் மேற்பட்ட வடிவில் மகரந்தம்

08.07.2018 அன்று சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் உள்ள ஒரு மரத்தின் பூ இது. மரத்தின்பெயர் தெரியவில்லை. ஆனால் அன்று நடைபெற்ற ஆசிரியர்களுக்கான மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி முகாமில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு இதன் மகரந்தத்தை காட்டினோம். அவர்கள் அசந்து போயினர். இந்த மகரந்தம் இரண்டு மூன்று வடிவங்களில் காணப்பட்டது. ஒன்று கோதுமை விதை போலும், சில டைமன் போல பல கோணத்திலும், சில செவ்வக வடிவத்திலும் காணப்பட்டது. ஒரு பூவின் மகரந்தத்திலேயே பன்முகத்தன்மை இருப்பதை பார்க்க முடிந்தது.

One Comment Add yours

  1. Raju says:

    Very nice photographs. Is it Kigelia africana (the sausage tree)?

Leave a Reply