காளானில் காணப்படும் நைட்ரஸன் முடிச்சுகள்

இனியன் பள்ளி விட்டு வந்ததும் முருங்கை மரம் அருகே சென்றான். அதன் மேல் ஒரு சிறிய காளான் பூத்திருந்தது. அதனை கையில் எடுத்துவந்தான் . இதனை காலையிலேயே பதிவு செய்ய நினைத்தானாம். ஆனால் பள்ளிக்கு நேரமானதால் இப்போது வந்து செய்ய ஆரம்பித்தான். காளான் வெள்ளை நிறத்தில் இருந்தது. அவன் ஒரு கண்ணாடி சிலேட்டை எடுத்துவந்தான். அதன் மேல் பகுதியில் சிலோ டேப்பால் ஒட்டி எடுத்து கண்ணாடி சிலேடு தயார் செய்தான். அதனை மடிப்பு நுண்ணோக்கியின் கீழ் வைத்து பார்த்து பதிவு செய்தான். அதன் பகுதியில் காணப்படும் கருப்பு கருப்பு பகுதிகள் நைட்ரஜன் முடிச்சுகள். இவை சிறந்த உரமாக இருக்கும். அதனால் தான் விவசாய நிலங்களில் நைட்ரஜன் போடப்படுகிறது. இது இயற்கை நைட்ரஜனை கொடுக்கும். இது எனது பாடத்தில் இருக்கிறது என்றான். அற்புதமான பதிவு. அவனுடைய பதிவு உங்களுடைய பார்வைக்கு.

 

 

Leave a Reply