மயில் கொண்டை பூவின் மகரந்தம்

விவிவி கல்லூரியில் இருந்த மயில் கொண்டை பூவின் மகரந்தம் பார்த்தோம். இரண்டு வைகையான பூக்கள் இருந்தன. ஒன்று மஞ்சல் நிறத்திலும், மற்றொன்று மஞ்சல் சிவப்பு கலந்த நிறத்திலும் இருந்தது. மகரந்தத்தை ஒப்பீடு செய்யும் போது இரண்டு வகையான மகரந்தம் ஒரே பூவில் இருந்ததை பார்க்க முடிந்தது. மேலும் சில தாவரங்களில் குறுக்கு வெட்டு தோற்றத்தின் நிரந்தர சிலேடுகளை பார்த்து பதிவு செய்தோம். ஒரு நாள் நிகழ்ச்சி இரண்டுவகையில் பயன்பட்டது. ஒன்று நாம் சாதாரணமாக பள்ளி கல்லூரிகளில் உள்ள மைக்ராஸ்கோப்பில் பார்ப்பதற்கும், மடிப்பு நுண்ணோக்கியில் பார்ப்பதற்குமான வித்தியாசத்தை உணரமுடிந்தது. பார்க்க முடிந்தது. மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். பேராசிரியர்கள் ஆச்சரியப்பட்டனர். இந்த மடிப்பு நுண்ணோக்கி இருந்தால் நாங்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக பல்வேறு நுண்ணுயிர்களை பார்த்து பதிவு செய்யவும், படம் வரைவதற்கும் பயன்படும் என்றனர்.

Leave a Reply