இன்று சில பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. ஈடன் சைன்ஸ் கிளப் மாணவர்கள் அப்பள்ளியில் படிக்கிறவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் இன்று காலை மடிப்பு நுண்ணோக்கிப் பதிவினை செய்வதற்கு பள்ளிக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு மடியில் இடம் கொடுக்கப்பட்டது. மடிப்பு நுண்ணோக்கியில் பார்ப்பதற்கு தேவையான அனைத்த வசதிகளும் ஒரு ஆய்வு கூடம் போல ஒரு பெஞ்ச் மீது வைக்கப்பட்டது. அதனை மாணவர்கள் எளிதில் பயன்படுத்தும் வகையிலும் வைக்கப்பட்டது. காலை 10 மணிக்கு 5 பேர் கொண்ட குழு வந்து தங்களது மடிப்பு நுண்ணோக்கியின் மூலம் பதிவுகளை செய்ய ஆரம்பித்தனர். எனக்கு வகுப்பு இருந்ததால் அவர்களுடன் இணைந்து செல்ல முடியவில்லை. அவர்களாகவே மாதிரிகளை சேகரிக்கச் சென்று சேகரித்து வந்தனர். அப்படி அவர்கள் பல பூக்களை பரித்துக் கொண்டு வந்தனர். அதன் மகரந்தங்களை பதிவு செய்வது என முடிவு செய்து முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் பல மலர்களின் மகரந்தங்களை பதிவு செய்ய முடியவில்லை என்று கூறினர். முடிந்தளவு அவர்கள் 6 அல்லது 7 மலர்களின் மகரந்தங்களை பதிவு செய்திருந்தனர். அதனை இங்கே பதிவேற்றம் செய்கிறோம். மேலும் அவர்கள் பேசும் போது இது போன்று ஒரு அறிவியல் ஆய்வு கூடம் எப்போதும் நாம் வந்து செய்து பார்த்து அறிந்து கொள்ளும் படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று பேசிக்கொண்டனர். இது அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. இந்த பதிவுகளை செய்தவர்கள் ஆகாஷ், தாழைமுத்து, சரண்.
Really nice pollen shots.