கல்லூரியில் மடிப்புநுண்ணோக்கி விழா

இன்று ஒரு அற்புதமான நாள். திருநெல்வேலியில் உள்ள அரசு பெண்கள் கல்லூரியான ராணி அண்ணா அரசு பெண்கள் கல்லூரியில் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் இரண்டு துறைக்கான பயிற்சி ஒன்று விலங்கியல் துறை மற்றொன்று தாவரவியல் துறை. ஒவ்வொரு துறையிலும் சுமார் 600 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மொத்தம் கல்லூரியில் 4000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் தேர்வு செய்யபட்ட 50 மாணவர்களுக்கு மடிப்ப நுண்ணோக்கி தயார் செய்தவற்கான பயிற்சி வழங்கப்பட்டது. பேராசிரியர்களின் முழுமையான ஒத்துழைப்போடு மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். ஒரு நாள் முழுவதும் நடைபெற்ற இந்த பயிற்சியில்மற்ற மாணவர்களுக்கு
1. மடிப்பு நுண்ணோக்கியின் மூலம் மாதிரிகளை பார்த்தல்.
2.புகைப்பட கண்காட்சி
3. சிலேடு தயாரித்து அதன் வழி பார்த்தல்
4. திரையிடுதல்
5. புதிர் விடுவித்தல்
6. படம் வரைதல் என 6 வகையான நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தோம். என்னுடன் எமது ஈடன் சைன்ஸ் கிளப் மாணவர்கள் கார்த்திக், நரேஷ் உதவி செய்தனர். இன்றய நிகழ்வு நேரம் போனதே தெரியவில்லை. மாணவர்களும் சாப்பிடுவதற்கு சில நிமிடங்களே எடுத்துக்கொண்டு மீண்டும் பயிற்சிக்கு வந்துவிட்டனர்.

மடிப்பு நுண்ணோக்கி தயாரிக்கப் பயிற்சி பெற்ற மாணவ குழுவினர். அவர்களுடைய வகுப்பு மாணவர்களுக்கு தாங்கள் கற்றுக்கொண்டதை திருப்பி விளக்கம் அளித்தது மிகச் சிறப்பாக இருந்தது. அரசு கல்லூரிக்கு இன்னும் கூடுதலாக மடிப்பு நுண்ணோக்கி கொடுத்திருக்கலாம். வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

இந்நிகழ்வில் ஆய்வு மாணவர்களும் தங்களுடைய பங்களிப்பையும், அவர்களும் இதனைப் பயன்படுத்தி பிராஜெக்ட் செய்ய முயற்சிப்போம் என்று சொன்னதும் கூடுதல் சிறப்பு.

Leave a Reply