மாவு வண்டின் நுகர்வுக்கொம்பு

இது நெல்லையில் செயல்பட்டுவரும் ராணி அண்ணா அரசு பெண்கள் கல்லூரியில் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி 07.09.2018 அன்று நடைபெற இருப்பதை அறிந்து மாணவிகள் முன்பே பல மாதிரிகளை சேகரித்து வைத்திருந்தனர். குறிப்பாக கொசு, எறும்பு, வண்டுகள், மாவு வண்டு என்றதும் எது என்றேன். அது பல நாட்கள் பயன்படுத்தாத மாவில் இந்த வண்டு வளர்கிறது. அதனை எடுத்துவந்து பதிவு செய்தார். அற்புதமான பதிவு. மேலும் 5 நாட்கள் ஆன ஒய்னையும் பதிவு செய்தோம். அதில் ஈஸ்டு வளர்ந்திருப்பதையும் பார்த்து மாணவிகள் ஆச்சரியம் அடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் விலங்கியல் மற்றும் தாவரவியல் மாணவர்கள் 1200 மாணவர்களும் (இளநிலை மற்றும் முதுநிலை, ஆராய்ச்சி மாணவர்கள் உட்பட) மற்ற துறை மாணவர்கள் 2800 பேரும் கண்காட்சியை கண்டு களித்தனர். அற்புதமான நிகழ்வு.

Leave a Reply