மடிப்பு நுண்ணோக்கி உயிரி நடைப் பயணம் – சோழவந்தான்

இன்று (16.09.2018) காலை 7 மணிக்கே ஈடன் சைன்ஸ் கிளப் மாணவர்கள் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். இன்று மடிப்பு நுண்ணோக்கி உயிரிநடைப்பயணம் திட்டமிட்டுருந்தோம். இதில் பறவைகள், பூச்சிகள் என பார்க ஏற்பாடு இல்லை. ஆனால் இன்றைக்கு குறைந்தது 50 பூக்களின் மகரந்தங்களை பதிவு செய்வது என்ற முடிவோடு பயணம் தொடங்கியது. சேர் ஆட்டோ, பஸ் என பல பயணங்கள் செய்து சோழவந்தான் வழியில் உள்ள மேலக்கால் பாலத்திலிருந்து எங்களது பயணம் 8.40க்கு தொடங்கியது. இதில் இரண்டு விஷயமட்டும் கொண்டோம். அதாவது ஏற்கனவே பதிவு செய்ததை மீண்டும் பதிவு செய்யக் கூடாது. புதிய பூக்களைதான் பதிவு செய்யவேண்டும். இரண்டாவது அந்த செடி மற்றும் பூக்களை அந்த பகுதி மக்கள் எவ்வாறு அழைக்கிறார்கள் என்பதையும் பதிவு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் பயணம் தொடங்கியது. இரண்டாவது பிரிவு சரியாக ஒத்துவரவில்லை. முதல் பிரிவு சரியாக இருந்தது. ஆனாலும் கூட திட்டமிட்டபடி 50 பூக்களை பதிவு செய்ய முடியவில்லை. 28 பூக்கள் மட்டுமே பதிவு செய்தோம். இதனை முடிக்க 11.30 ஆகிவிட்டது. வெயில் வந்துவிட்டதால் நாங்கள் தேடலை முடித்துக்கொண்டு வீடு திரும்பினோம். ஆனால் அற்புதமான பயணம். பயணங்கள் மாணவர்களுக்கு அற்புதமான அனுபவத்தை கொடுக்கின்றன. ஊன்றி கவனிக்கின்றனர். ஒப்பீடு செய்கின்றனர். பல வகைகளை கண்டறிகின்றனர். மாணவர்கள் மேன்மை அடைந்திருப்பதை கவனிக்க முடிந்தது. பயணம் தொடரும்.  இந்த பயணத்தில் பங்கேற்றோர் 1. விஷால், 2. வீர நரேஷ்,3. பரத்பாபு, 4. கார்த்திக் 5. இனியன், 6.சதீஸ்,7. சந்தோஷ்,8. தாழமுத்து, இவர்களுடன் நான்.

 

Leave a Reply