காரைக்குடி புத்தக கண்காட்சியில் மடிப்பு நுண்ணோக்கி கண்காட்சி

12ம் அக்டோபர் 2018 அன்று காரைக்குடியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் புத்தக கண்காட்சியில் ஒரு நாள் மடிப்பு நுண்ணோக்கி கண்காட்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டை சிவகங்கை மாவட்டக்குழு செய்திருந்தது. காலை 10 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கி மாலை 7.10 வரை சென்றது. 800க்கும் மேற்பாட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் 200க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கண்டு களித்தனர். அற்புதமான நிகழ்ச்சி. பொதுவாக பெண்குழந்தைகள் ஊரைவிட்டு வெளியே வருவது இல்லையாம். ஆனால் இன்று முதன் முதலில் கிராமத்தை விட்டு வெளியே வந்த பெண் மாணவர்களை கண்டு ஆச்சரியமடைந்தேன். மேலும் இது போன்ற கிராமங்கள் 21ம் நூற்றாண்டிலும் தொடர்வது பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது. இவர்களின் வெளி தொடர்பற்ற நிலை என்பது அவர்களுடைய அறிவை எப்படி விரிவடையச் செய்யும் என்றுதான் தெரியவில்லை. அவர்கள் மடிப்பு நுண்ணோக்கியை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கி போனார்கள். அவர்கள் பள்ளிக்கு வரும்படியும் கேட்டுக்கொண்டார்கள். அப்பள்ளி ஆசிரியர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Leave a Reply