ரயில் பயணத்தில் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி

தேசிய அறிவியல் ஆசிரியர்கள் மாநாட்டி நிகழ்ச்சி IISF2018 Lucknow ல் நடைபெற்றது. இதற்கு நான் கலந்து கொள்வதற்கு ரயிலில் பயணம் செய்தேன். சுமார் 40 மணி நேர பயணம் என்பதால் என்னுடன் சில மடிப்பு நுண்ணோக்கியை எடுத்துச் சென்றேன். மேலும் என்னுடன் தமிழ்நாட்டில் இருந்து பயணம் செய்த நண்பர்கள் ஆசிரியர் ராஜாங்கம், மற்றும தம்பி கனகராஜ் ஆகியோருக்கும் இந்த மடிப்பு நுண்ணோக்கியை தனியாக தன் நண்பர்கள் மூலம் பெற்றிருந்து அதனையும் எடுத்துவந்திருந்தனர். ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோதே இதற்கான பயிற்சியை கொடுக்க முனைந்தேன். இருவருக்கும் மடிப்பு நுண்ணோக்கியை எப்படி செய்வதுஎன்று பயிற்சி வழங்கினேன். நாங்கள் பயணம் செய்யத பெட்டியில் B.Com, படிக்கும் மாணவி ஒருவரும், அவருடை தம்பி சுற்றுலா துறை குறித்து படிப்பவர்களும் அவர்களுடைய குடும்பத்தாரும் பயணம் செய்தனர். நான் பயிற்சி கொடுக்கும் போது பாத்துக் கொண்டிருந்தவர்கள் என்ன என்று கேட்க தயங்கிய போது நாங்களே அழைத்து அதனை குறித்த விளக்கம் அளித்தோம். அவர்கள் ஆச்சரியபட்டுப் போனார்கள். எங்களிடம் இருந்த நிரந்தர சிலேடு வைத்து காண்பித்தோம். மகிழ்ந்து போனார்கள்.

மறுநாள் காலை உணவுக்கு பின்பு மடிப்பு நுண்ணோக்கியை கொண்டு விவாதித்துக்கொண்டிருந்தோம். எங்கள் காம்பாரட் மெண்ட்ல் சுமார் 60 பேர் பயணம் செய்தனர். அத்தனை பேரும் இதனை பார்த்துச் சென்றனர். மேலும் அருகில் இருந்த கம்பார்மெண்ட்ல் இருந்த நேபாளைச் சேர்ந்த குடும்பத்தினர் வந்து பார்த்துச் சென்றனர்.  இதில் பூக்களையும், பூச்சிகளையும் பார்த்து ரசித்தனர். மகிழ்ந்தனர். இந்த 40 மணிநேரமும்  முழுமையாக பயனுள்ளதாக இருந்தது. ரயில் பயணம் மடிப்பு நுண்ணோக்கியை எடுத்துச் செல்வதற்கும் அதனை பிரபலபடுத்துவதற்கும் பெரிதும் உதவியது.

 

Leave a Reply