மின்னும் மகரந்தம்

லக்னோவில் நிகழ்ச்சி முடித்துவிட்டு வீடு திரும்பினேன். எனக்கு சென்னையில் 10ம் தேதி இரவு 9.40க்குதான் ரயில். என் மருமகன் வீட்டில் தங்கிவிட்டு விட்டு இரவு செல்லலாம் என்று முடிவெடுத்தேன். அதன் அடிப்படையில் சென்னை கே.கே நகரில் உள்ள அவன் வீட்டில் தங்கினேன். அவன் வீட்டு மொட்டை மாடியில் பல செடிகள் வளர்க்கிறார்கள். அதன் மகரந்தங்களை பதிவு செய்யலாம் என்று முடிவு செய்தேன். அதன் அடிப்படையில் மாலை 5 மணி அளவில் ஒவ்வொரு செடியாக சென்று அதன் மகரந்தங்களை பதிவு செய்யதேன். இறுதியாக பிரண்டை(மருத்துவ குணம் கொண்டது.) செடியின் மகரந்தத்தை பதிவு செய்தேன். சூரியன் மறைந்து கொண்டிருந்தது. அப்போது அந்த மகரந்த்தை மடிப்பு நுண்ணோக்கியில் வைத்து பார்த்த போது கறுப்பு நிறத்தில் தெரிந்தது. மெதுவாக வெளிச்சம் புக சூரியனை நோக்கி வைத்தபோது அது தங்க நிறத்தில் மின்னியது. அதனை அங்கிட்டும், இங்கிட்டும் அதைத்த போது ஒரு மேஜிக் போல் தோன்றியது. அதனை ஏன் வீடியோ செய்யக் கூடாது என்று தோன்றியது. அந்த வீடியோ தான் அங்கே உங்கள் பார்வைக்கு.

Leave a Reply