காலையில் இதை பதிவு செய்தேன். அம்மா சமைப்பதற்காக தக்காளிப் பழம் எடுத்து அறுத்துக்கொண்டிருந்தாங்க. நான் அதன் குறுக்கு வெட்டு தோற்றம் எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்காக ஒரு பிளேட் ஆல் வெட்டி எடுத்து கண்ணாடி சிலேட்டில் வைத்துப்ப பார்த்தேன். அதன் உள்ளே அற்புதமான நீர் திவளைகள் போல பார்த்தேன். பனித்துளிகள் அருகே அருகே ஒட்டியிருப்பது போல இருந்தது. தோல் பகுதியில் ஆரஞ்ச் நிறத்தில் குருணை குருணையாக தெரிந்தது. பார்ப்பதற்கே அழகாக இருந்தது. அப்படியே பள்ளிக்கு எடுத்துச் சென்று என் நண்பர்களுக்கு காட்டி ஆச்சரியப்படுத்தினேன்.