மும்பையில் மடிப்பு நுண்ணோக்கிப்பயிற்சி – 1

மும்பை மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி-1 DSCN0088 DSCN0067 DSCN0069 DSCN0076

DSCN0073

2017 ஆகஸ்ட் 28,29 ஆகிய தேதிகளில் ஸ்டான்போர்ட் பல்கலைகழக பேரா. மனுபிரகாஷ் முன்னிலையில் இந்திய அரசின் DBTன் பெரும் முயற்சியில் இந்திய அளவில் புதிய அற்புத கண்டுபிடிப்பான மடிப்பு நுண்ணோக்கியின் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பில் பயிற்சி மும்பையில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் விஞ்ஞா

DSCN0077

னிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் நான் கலந்து கொண்டது பெருமையளிக்கிறது. மேலும் நான் இந்த பயிற்சியில் நான் கலந்து கொள்வதற்கு மிப்பெரிய விஞ்ஞானிகள் பலரும் மெனக்கிட்டது உண்மையிலேயே எனக்கு பெருமையை சேர்த்திருக்கிறது. இந்த நேரத்தில் அத்துணை பேருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக மடிப்பு நுண்ணோக்கியினை கண்டுபிடித்து சமூகத்திற்கு வழங்கிகொண்டிருக்கும் Dr. மனுபிரகாஷ்,  Dr.லட்சுமணநாராயணன்  Dr. S. கிருஷ்ணசாமி, Dr. ராமானுஜம், Dr. உத்ரா, Dr. வினாயக், பேரா. ராஜமாணிக்கம், Dr. த.வி.வெங்கடேஷ்வரன், திரு. ஜிம் Dr. தினகரன், Dr. உஷா , Dr. சாம் இன்னும் கண்ணுக்கு தெரியாத எத்தயோ அறிஞர்கள், இவர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் மும்பையில் இறங்கியது முதல் மழை

DSCN0088

தான். நாங்கள் 28ம் தேதி காலையில் 7 மணிக்கெல்லாம் தயாரிகிவிட்டோம். நான். உத்ரா மற்றும் எங்களோடு தங்கியிருந்த சுமார் 25 ஆசிரியர்கள் அனைவரும் தயாராக இருந்தோம். எனக்கு முதன் முதலாக மனுவை பார்க்க போகிறோம் என்ற ஆவல் இருந்தது. அவரை இதற்கு முன் முகநூலில்தான் பார்த்திருக்கிறேன். இப்போதுதான் நேரில் பார்க்க இருக்கிறேன். அவரை மட்டுமல்ல பேரா. உத்ரா அவர்களையும் இப்போதுதான் முதன் முதலில் நேரில் பார்க்கிறேன். இந்த பயணத்தில் எனக்கு நிறைய முதல்கள் உள்ளன.

மும்பை ஐஐடி பஸ் வந்தது எங்கள் பயணம் தொடங்கியது. மழை தொடர்ந்து பெய்துகொண்டே இருந்தது. நாங்கள் ஒரு திருமண மண்டபத்திற்கு சென்றோம். அங்கே எங்களுக்கு முன்பே 20க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் மனும் மற்றும் ஜிம் இருவரும்  மடிப்பு நுண்ளோக்கியை பிரித்து வைத்துக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு முன்பு சிவப்பு கம்பளத்தில் உருதி பள்ளி மாணவ மாணவிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் அமர்ந்திருந்தனர். அவர்களை பார்த்ததும் எனக்கு கொஞ்சம் உற்சாகம் ஏற்பட்டுவிட்டது. அதை விட மனுவை பார்த்து ஒரு ஹாய் சொல்லிவிட வேண்டும் என்று தோன்றியது.

மாணவர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு பின்னே ஒரு ஓரத்தில் ஒருவர் உட்கார்ந்திருந்தார். நான் அவரிடம் சென்று என்னை அறிமுகம் செய்து கொண்டேன். அவர் ஒரு சேரைகாட்டி உட்காருங்கள் என்றார். நானும் உட்கார்ந்தேன். பின்னர் தான் தெரிந்தது அவர்தான் DBTன் செயலாளர் என்று. மிக எளிமையாக அவரை பார்த்தேன். அற்புத மா மனிதர்.

நான் உத்ராவிடம் சொல்லிவிட்டு மனுவை பார்த்துவிட்டு வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு மனுவின் அருகே சென்றேன். ஆனால் மனு மிக துரிதமாக மடிப்பு நுண்ணோக்கிகளை பிரித்து வைத்துக் கொண்டிருந்தார். அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. திரும்பிவிட்டேன். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று உத்ராவிடம் சொல்லிவிட்டு இருக்கையில் உட்கார்ந்திருந்தேன். சில நிமிடம் சென்றிருக்கும். மனு ஒரு சிறு சத்தத்தோடு பெரும் மகிழ்ச்சியோடு என்னிடம் வந்து பேசிச்கொண்டார். கட்டி தழுவிக்கொண்டார். எனக்கு மிக பெரிய மகிழ்சியில் ஆழ்ந்து போனேன். என் மகிழ்ச்சிக்க எல்லையே கிடையாது.  காரணம் உண்டு.

நான் ஒன்றும் பெரிய விஞ்ஞானிகிடையாது. நான் ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியர் அவ்வளவுதான். நான் எனக்கு இருக்கும் அறிவியலின் மீது உள்ள ஆர்வத்தால் எங்கள் பகுதியில் செய்யும் சிறிய பணிதான் இந்த மடிப்பு நுண்ணோக்கி பதிவுகள். எல்லாம் என் மாணவர்கள் பதிவு செய்ய நான் அதனை பதிவேற்றம் செய்வேன். எனக்கு அதில் பதிவு செய்யும் எந்த பொருளின் அறிவியல் பெயரும் தெரியாது. ஆனால் மாணவர்கள் அவர்கள் கூறும் அல்லது எங்கள் பகுதியில் என்ன பெயரில் அழைக்கிறமோ அதை அப்படியே பதிவிடுகிறேன். அவ்வளவுதான். அதற்கான அங்கீகராம் தான் இது என்று நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருந்தது. அதன் பிறகு  ஜிமிடம் சென்று நானே அறிமுகம் ஆகிக்கொண்டேன். எனக்கு உற்சாகம் அதிகமாகிவிட்டது. நான் குழந்தைகள் அமர்ந்திருப்பதை பார்த்து இது வகுப்றைபோல் இருக்கிறது. நாம் இறங்கி இவர்களை வட்ட வடிவில் உட்கார வைத்து பயிற்சி கொடுத்தால் தான் சிறப்பாக இருக்கும் என்று உத்ராவிடம் கூறினேன். அவர்களும் சரி என்றார்கள். சிறிது நேரத்தில் நிழ்ச்சி ஆரம்பமானது.

DBTயின் செயலாளர் பேரா. கே. விஜய்ராகவன்  அவர்கள் துவக்கி வைத்து பேசினார். அவரை தொடர்ந்து மனுப்பிரகாஷ் நாம் என்ன செய்ய போகிறோம் என்று பேசினார். அதை தொடர்ந்து நாங்கள் என்ன நினைத்தோமோ அதனையே மனுவும் செய்தார். ஆசிரியர்களையும் மாணவர்களையம் ஐந்து ஐந்து பேராக கொண்ட குழுவாக பிரித்தார். எங்களுக்கு ஒரு குழு கொடுக்கப்பட்டது. எங்கள் குழுவில் 7 ஆசிரியர்கள் 5 மாணவர்கள் இருந்தோம் நிதா, ராணி, சமீர், ரம்ஜான், மற்றம் அஃப்ரின் எங்கள் அனைவருக்கும் மடிப்பு நுண்ணோக்கி கொடுக்கப்பட்டது. நாங்கள் எங்களுக்க கொடுக்கப்பட்ட வழிகாட்டி தாளிலிருந்து செய்ய தொடங்கினோம். உண்மையில் மாணவர்கள் ஆசிரியர்களை விட மிக வேகமாகவும் சரியாகவும் செய்தனர். மேலும் தெரியா குழந்தைகளுக்கு தெரிந்த குழந்தைகள் தாங்களாகவே முன்வந்து சொல்லிக்கொடுப்பதை பார்க்க முடிந்தது. மேலும் சில ஆசிரியர்களுக்கே கூட அவர்கள் சொல்லிக்கொடுத்ததை பார்க்க முடிந்தது. ஆக ஆசிரிர்களை விட மாணவர்கள் திறம்பெற்றவர்களாகவே இருக்கின்றனர் என்பதை இந்த பயிற்சியில் கண்டறிந்து கொள்ள முடிந்தது. மேலும் மாணவர்கள் மிக விரைவாக புரிந்து கொள்கிறார்கள். அவர்கள் வேகத்திற்கு ஆசிரியர்கள் செல்ல முடியவில்லை என்பதையும் பார்க்க முடிந்தது. எங்கள் குழுவிற்கு சற்று நேரத்தில் கூடுதலாக மேலும் சில ஆசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்த கொண்டனர். நான் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கினேன். என்னுடைய ஆங்கிலத்தை குழந்தைகளும் ஆசிரியர்களும் புரிந்து கொண்டனர். அதைவிட இந்த பயிற்சிக்கு மொழி பெரிய தடை இல்லை என்பதை என்னால் உணரமுடிந்தது. மடிப்பு நுண்ணோக்கியின் புதிய வடிவம் மாணவர்கள் குழப்பமின்றி உருவாக்கி கொள்ளும் வகையில் வண்ண அமைப்பில் அமைக்கப்பட்டிருந்தது கூடுதல் சிறப்பு. மடிப்பு நுண்ணோக்கியை செய்து முடித்தப்பின் அதற்குள் மாதிரிகளை வைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் பார்த்து ரசித்தனர். ஆச்சரியத்தில் மூழ்கினர். அந்த பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களை தேர்ந்தெடுத்தது உண்மையிலேயே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. வீட்டை விட்டும், பள்ளியை விட்டும் வெளியே வராத மாணவர்கள் அவர்கள். மேலும பெரும்பான்மையான மாணவர்கள் பெண் குழந்தைகள். அங்கே மற்றொன்றையும் பார்த்தேன். அறிவியல் முக்கோண அமைப்பில் இருப்பதை. ஆம் ஆசிரியர்கள், மாணவர்கள், விஞ்ஞானிகள் என்ற மூக்கோணம் நுண்ணுலகினை பார்த்து ரசிக்கவும், ஆராயவும் முனைந்திருப்பதை பார்க்கமுடிந்தது.

எங்களுக்கு அந்த பயிற்சி முடிந்ததும் நாங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு திரும்பிவிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் நாள் அவ்வளவுதான் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மீதி நேரம் வேஸ்டாகுமே என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, மனு என்னை அழைத்து நீங்கள் எங்களோடு வரமுடியுமா? நாங்கள் இதை முடித்துவிட்டு தாராவி என்று சொல்லப்படும் சிலம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கலாம் என்றார். அப்பாடா! சரி என்று சொல்லிவிட்டேன். பின்னர் உத்ரா அவர்களிடமும் கேட்டேன். அவரும் வர விருப்பம் தெரிவிக்க அந்த தாராவி பயிற்சிக்கு அவரையும் இணைத்துக் கொண்டோம். மதிய உணவு பீஷா வழங்கப்பட்டது. நான் முதன் முதலில் பீஷாவை சுவைத்தேன்.

Leave a Reply