Two days Foldscope workshop

Applause IconDec 31, 2024 • 4:14 PM UTC
Location IconIndia
Applause Icon140x Magnification
Applause IconLesson Plan

I am a Primary School Teacher

1018posts
129comments
62locations
வருடத்தின் இறுதி இரண்டு நாள்கள் 30-31 மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி திருச்சி நேசனல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் 50 முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

இரண்டு நாளும் திட்டமிட்ட படி மிகச் சிறப்பாக நடைபெற்றது. பரபரப்பாக மடிப்பு நுண்ணோக்கி தயாரிப்பது என்ற நிலை இல்லாமல் இருந்ததை இன்றைய நிகழ்சியில் பார்க்க முடிந்தது. பொறுமையாகவும் நிதானமாகவும் அனைவரும் ஈடுபாட்டுடனும் செய்ததைப் பார்க்க முடிந்தது.

இந்த இரண்டு நாள் பயிற்சி என்பதே மடிப்பு நுண்ணோக்கியை முழுமையாக கற்றுக்கொள்ளவும் அதனை புரிந்து கொள்ளவும், மாணவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக தன்னுடைய மடிப்பு நுண்ணோக்கியை கையாளவும் சிறப்பாக கற்றுக்கொள்ள முடிந்தது.

இந்த இரண்டு நாள் பயிற்சி முகாமிற்காக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பேரா. முனைவர். கோகுலன் அவர்கள் திருச்சியில் ஒரு நாள் கேட்டக் கொண்டார். அது இப்போதுதான் நிறைவேறியது. முனைவர் கோகுலன் மற்றும் நேசல் கல்லூரி நிர்வாகத்திற்கு மிக்க நன்றி.

இந்த பயிற்சியினை மிகச் சிறப்பாக பயிற்சி அளிக்க என்னுடன் இணைந்த பயிற்சியாளர்கள் டாஸ்ன் நிர்வாகி சாந்தி, பிரான்ஸ் நாட்டில் ஆய்வு மாணவராக இருக்கும் முகிலன், மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவரான இனியன் மற்றும் இந்த நிகழ்சிக்கான அனைத்தையும் ஒருங்கிணைத்துக் கொடுத்த டாஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் திருமிகு. மனோகர் செய்துகொடுத்திருந்தார்.

இந்த ஆண்டின் இறுதி நாட்கள் மாணவர்களோடும், பேராசிரிர்களோடும், மடிப்பு நுண்ணோக்கியோடும் பயணம் செய்தது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

அனுபவத்தின் அடிப்படையில் இரண்டு நாள் பயிற்சியே மடிப்பு நுண்ணோக்கிக்கு சிறப்பாக இருக்கும்.

இரண்டு நாட்களுக்கான திட்டமிடல் கீழே உள்ளது.

Two days foldscope workshop time table
First Day

09:30 – 10:00 Registration & Inagural function.

10:00 – 10:30 History of foldscope
10:30 – 10:45 Tea Break
10:45 – 01:00 Foldscope making
01:00 – 02:00 Lunch
02:00 – 02:45 How to Use Foldscope
02:45 – 03:15 Error Correction
03:15 – 03:30 Break
03:30 – 04:30 How to prepare slide and view through foldscope
04:30 – 05:00 Error Correction.

Second Day
09:30 – 10:00 Previous Day experience sharing .
10:00 – 10:45 How to prepare Different types of Samples and Draw the image
10:45 – 11:00 Tea Break
11:00 – 12:30 How to record in Mobile phones and record samples
12:30 – 01:00 Error Correction
01:00 – 02:00 Lunch
02:00 – 03:00 How to prepare wet samples and record in Mobile phones
03:00 – 03:30 How to register in microcosmos community platform
03:30 – 03:45 Tea Break
03:45 – 04:30 How to upload the images in microcosmos community platform.
04:30 – 5:00 What next Discussion and experience sharing.
Valedictory. Distribution of Certificates.
மதுரை.

Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!

More Posts from Pandiarajan tnsf