அம்மா ரசம் வைத்துக்கொண்டிருக்கும் போது தோன்றியது. ஒரு சிறு கொத்தமல்லி தளையை வைத்து பார்க்கலாம் என்று. உடனே என்னுடைய FoldScopeஐ எடுத்து கண்ணாடி சிலேடில் வைத்துப் பார்த்தேன். ஆகா தடித்த தண்டு பகுதி மட்டும் வெள்ளையாக தெரிந்தது. ஒரு வேளை அதன் வழிதான் தண்ணீர் போயிருக்குமோ. புள்ளில் கூட இது போன்ற நேர் வெள்ளை கோடுகள் தெரிந்தன. பார்ப்பதற்கு ரொம்பவும அழகாக இருந்தது.
P. Muthins 7th Std