தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கோவை மாவட்டம் மே்டுப்பாளையத்தில் இரண்டு நாள் பெண்களுக்கான மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில்தமிழக அரசின் செயல்பாட்டில் உள்ள STEM ambassadors 25 பேரும் 25 ஆசிரியர்களும் பயிற்சியில் பங்கேற்றனர். இவர்கள் வழியாக சுமார் 50000 மாணவர்களுக்கு மடிப்பு நுண்ணோக்கி அறிமுகப்படுத்துவதோடு, மாணவர்களுக்கு பார்க்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பான்மையான இஸ்லாமிய ஆசிரியர்கள் பங்கேற்றது கூடுதல் உத்வேகத்தை அளித்தது. இரண்டு நாள் பயிற்சியில் ஆசிரியர்கள் அனைவரும் உற்சாகமாக பங்கேற்றனர். குறிப்பாக அறிவியல் ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் கலை பாடங்களை நடத்தும் ஆசிரியர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றது மகிழ்ச்சி அளித்தது. இப் பயிற்சியில் எனக்கு துணையாக ரமேசன் அவர்களும் ரிசி சரவணன் அவர்களும் இருந்தனர்.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!