பள்ளியின் கடைசி வேளைப் பிரிவில் குழந்தைகளோடு விளையாடிக்கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் foldscope பார்த்து நீண்ட நாள் ஆகிவிட்டது. ஆகையால் நாம் அதை இன்று பார்க்கலாம் என்று சொன்னார்கள். ஆனால் பள்ளி முடிவதற்கு 15 நிமிடங்கள்தான் இருந்தது. பெற்றோர்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்கு வெளியே காத்திருந்தனர்.
என் பையில் எப்போதும் foldscope இருப்பதால் உடனே செயலில் இறங்கினோம். சரி எதை பார்ப்பது? சுகினாவின் பேனை பார்ப்பது என்று முடிவானது.
சில வினாடிகளில் ஒருவர் சுகினாவின் பேனை பிடித்து விட்டார். அதனை foldscope 2.0ல் வைத்துப் பார்த்து ஆச்சரியபட்டுக்கொண்டோம்.
அதனை போட்டோவும் வீடியோவும் எடுத்துக் கொண்டோம்.
இதற்கு முன்பு கூட நாங்கள் பேன் பிடித்து foldscopeல் பாரத்திருக்கிறோம். ஆனால் இன்று வித்தியாசமாக ஒரு விஷயத்தைப் பாரத்தோம். தோலுக்குள் முடிகள் போன்றோ தெரிந்தது. அது என்ன என்பது எங்களுக்கு தெரியவில்லை. குறிப்பாக முடி என்பது உடம்பிற்கு வெளியே இருக்கும். ஆனால் பூச்சிகளுக்கு உள்ளேயும் அது போன்ற அமைப்பு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அது உங்கள் பார்வைக்கு இங்கே கொடுத்துள்ளோம்.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!