Rotifer

Applause IconApr 09, 2026 • 9:02 AM UTC
Location IconIndia
Applause Icon140x Magnification
Applause IconMicroorganisms
User Profile

I am a Primary School Teacher

1037posts
131comments
62locations
TODO
பள்ளியில் ஒரு டப்பாவில் தேங்கியிருந்த மழைத் தண்ணீரில் பதிவு செய்தது.

தண்ணீரை சேகரித்தபின்னர் அதன் உள்ளே நுண்ணுயிர்கள் இருக்கின்றனவா என்பதை பார்ப்பதற்க 10X முனை கொண்ட லைட் சோர்சை பயன்படுத்தி உற்றிநோக்கினோம். ஆனால் அதில் ஒன்றும் தெரியவில்லை. உண்மையில் தண்ணீரில் எதுவும் இல்லை என்றே தோன்றியது.

சேகரித்த குப்பியின் பின்னால் ஒரு டார்ச் லைட் அடித்துப் பார்த போது சில மிகச் சிறிய நுண்ணுயிர்கள் ஓடிக்கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது.

சிறிது நேரம் காத்திருந்த பின்னர். குப்பியின் அடியில் தேங்கியிருந்த பகுதியை எடுத்து சிலேட்டில் வைத்து அதனை பார்த்த போது Rotifer நிறைய இருந்ததை பார்க்க முடிந்தது. உடனே பதிவு செய்தோம்.

இந்த பதிவு இரவு நேரத்தில் செய்ததால் 2.0 Foldscope பயன்படுத்தினோம். அதில் கீழிருந்து மேலாக வெளிச்சம் கொடுத்த போது தெளிவாக பார்க்க முடியவில்லை. ஆனால் ரோட்டிஃபர் அங்கும் இங்கும் ஒரு வெள்ளை புழு துண்டுபோல ஓடுவதைப் பார்க்க முடிந்தது.

பின்னர் லைட் சோர்சை மேல் பகுதியிலிருந்து அனுப்பும் போது நாம் இப்போது பார்க்கிற ரோட்டிஃபியர் தெரிந்தது. அது ஒரு ஜெல்லி போல காணப்பட்டது.

அதன் பின்னர் டியூப் லைட் வெளிச்சத்தில் பார்த்த போது உள்பகுதிகளும் இரண்டு பக்கம் சக்கரம் போன்ற பகுதியும், நடுவில் கண்போன்ற பகுதியும் தெளிவாக காணப்பட்டது.

முன்பக்கம் சக்கரம் போன்று சுற்றும் போது ரோட்டிஃபியரின் பக்கங்களில் சிறிய பாக்டீரிய போன்றவை ஓடுவதை பார்க்க முடிந்தது.
View in Media Gallery

Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!

More Posts from Pandiarajan tnsf