மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் இரண்டு நாள் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக மடிப்பு நுண்ணோக்கியையும் காட்சி படுத்தியிருந்தேன். அக் கண்காட்சியில் 18 பள்ளிகளிலிருந்து சுமார் 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்டு களித்தனர். இதில் மடிப்பு நுண்ணோக்கி அவர்களை வெகுவாக கவர்ந்தது என்பதை அவர்கள் கருத்துக்களை பதிவு செய்ததிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. கல்லூரி நிர்வாகம் தங்களது மாணவர்களுக்கு பயிற்சி வழங்கும் படி கேட்டுக் கொண்டனர். ஆனால் என்னால் உறுதி கூறமுடியவில்லை. என்னிடம் மடிப்பு நுண்ணோக்கியும் இல்லை.
அதே சமயத்தில் பார்வையிட்ட பல மாணவர்கள் மடிப்பு நுண்ணோக்கியில் பார்த்ததை படம் வரைந்து சென்றனர். அவர்களுக்கு அது பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இனி வரும் காலத்தில் மடிப்பு நுண்ணோக்கி கண்காட்சியில் படம் வரைவதற்காகன ஒரு கார்ணர் வைக்க வேண்டும். அது மாணவர்களை மேலும் உற்சாகப்படுத்தப் பயன்படுகிறது.
இதில் பள்ளி மாணவர்கள் மட்டும்மல்லாமல் கல்லூரி பேராசிரியர்களும் அவர்களது குழந்தைகளும், கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்டு பல்வேறு விஷயங்களை கேட்டறிந்து கொண்டனர். சில கல்லூரி மாணவிகள் உற்சாகமாக மடிப்பு நுண்ணோக்கியைப் பயன்படுத்தி பதிவும் செய்தனர்.